ஃபோக்ஸ்வேகனில் புதிய காரை வாங்க வேண்டியதுதான்... புதுசா இத்தனை கார்கள் மார்க்கெட்டுக்கு வருதா?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்திய கார்கள் சந்தை கடந்த காலங்களில் இருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஏற்றமும், இறக்கமுமாய் இருந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாகவே உள்ளது. இந்த தைரியத்தில், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக 3 கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

விர்டுஸ் ஃபேஸ்லிஃப்ட் (Virtus Facelift): இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார் இதுவாகும். முன்பு விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் இடத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செடான் ரக காராக விர்டுஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 2022 மார்ச் மாதத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட விர்டுஸ் காருக்கு விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க ஃபோக்ஸ்வேகன் தயாராகி வருகிறது.

upcoming volkswagen cars in india

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிகவும் சில செடான் கார்களுள் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனையாகும் காராகவும் விர்டுஸ் விளங்குகிறது. விற்பனைக்கு வந்து 2 வருடங்களாகி விட்டதால், விர்டுஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட உள்ளது.

புதிய விர்டுஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை அடுத்த 2025ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம். விர்டுஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முகப்பு பகுதியின் தோற்றம் பெரிய அளவில் மாற்றப்படும். இதன்படி, காரின் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களின் டிசைன் மாற்றப்படும் என்பது உறுதி. அதேபோல், காருக்கு உள்ளேயும் கேபினுக்கு புதுமையான அலங்கரிப்பு வழங்கப்படும்.

upcoming volkswagen cars in india

டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift): ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா நிறுவனங்கள் இணைந்து இந்திய மக்களுக்காக உருவாக்கிய எம்க்யூபி ஏ0 இன் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காரான டைகுனும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட உள்ளது. ஏனெனில், இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டும் சில வருடங்களாகி விட்டன. 2021ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டைகுனில் பலமுறை ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், டைகுனுக்கு முக்கிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் இப்போதுதான் வழங்கப்பட உள்ளது. விர்டுஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று, டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் முன் மற்றும் பின்பகுதிகள் அப்டேட் செய்யப்படும். அதேபோல், காருக்கு உள்ளேயும் சிறு, சிறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதேநேரம், ADAS மற்றும் பனோராமிக் சன்ரூஃப் போன்ற டெக்னாலஜி அப்டேட்களையும் எதிர்பார்க்கலாம்.

upcoming volkswagen cars in india

டைரன் (Tyron): இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்சமயம் 7-சீட்டர் எஸ்யூவி கார்கள் எதையும் விற்பனை செய்யவில்லை. முன்னதாக, விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த டிகுவான் ஆல்ஸ்பேஸின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. போதிய விற்பனை இல்லாததால் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் நிறுத்தியது. இதனை தொடர்ந்து, டிகுவான் காரின் மற்ற வேரியண்ட்களின் விற்பனையையும் ஃபோக்ஸ்வேகன் மொத்தமாக நிறுத்திக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின், டிகுவான் இருந்த இடத்தில் டைரன் என்கிற காரை விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் தயாராகி வருகிறது. ஃபோக்ஸ்வேகனின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி காரான டைரனில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின் ஆப்ஷன்களிலும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் என்ஜின்களுடன் வழங்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான சந்தைகளுள் ஒன்றாகும். ஆதலால், இந்தியாவில் முடிந்தவரையில் ஆக்டீவ்வாக இருக்கவே ஃபோக்ஸ்வேகன் விரும்பும். அந்த வகையில், அடுத்த 6 மாதத்திற்கு உள்ளாக இந்த 3 கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதில், எது வாடிக்கையாளர்களை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 17:32 [IST]
English summary
Upcoming volkswagen cars in india virtus facelift to tayron
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X