முதல் முறையாக இந்திய சாலையில் சுற்றி திரிந்த கார்.. இதுதான் 5 ஸ்டார் கார் நெக்ஸானுக்கு போட்டியா வர போகுதா!!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் வாகன உற்பத்தியாளர்கள் இந்த பிரிவை மையப்படுத்தி தங்களின் புதிய தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இந்திய சாலையில் புதுமுக சப்-4 மீட்டர் (Sub-4 Meter SUV) பிரிவைச் சேர்ந்த எஸ்யூவி கார் மாடல் ஒன்று மறைப்புகளுடன் காட்சி தந்திருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் காட்சி திருவது இதுவே முதல் முறையாகும். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. மும்பையின் நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலையிலேயே அந்த கார் சுற்றி திரிந்திருக்கின்றது. இந்த புதுமுக கார் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் தயாரிப்பு என கூறப்படுகின்றது.

Volkswagen sub-4 meter suv spied

Source: Bunny Punia இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. புதுமுக சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காரின் இந்திய வருகை பற்றியதே அது ஆகும். இந்த நிலையிலேயே நிறுவனத்தின் புதுமுக கார் மறைப்புகளுடன் இந்தியாவில் காட்சி தந்திருக்கின்றது.

சமீபத்தில் ஸ்கோடா நிறுவனமும் இதேபோல் இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து ஓர் டீசர் படத்தையும் அது வெளியிட்டிருந்தது. இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

Volkswagen sub-4 meter suv

அந்தவகையிலேயே இந்த புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரையும் நிறுவனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் ஸ்கோடா புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் டீசர் படத்தை வெளியிட்டது. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஒரு படி மேலே போய் அந்த காரை சோதனையோட்டம் செய்யவே தொடங்கிவிட்டது.

விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே இந்த காரை தீவிர சாலை சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தத் தொடங்கி இருக்கின்றது. எனவே, வெகு விரைவிலேயே தற்போது மறைப்புகளுடன் காட்சி தந்திருக்கும் அந்த கார் மறைப்புகள் அற்ற நிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அந்த நாள் எப்போது என்கிற துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதன் வெளியீடு பற்றிய தகவலையும், கார் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் ஃபோக்ஸ்வேகன் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் ஏற்கனவே மிகப் பெரிய அளவில் போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்த பிரிவின் தலைவன்களாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இவையே இந்த பிரிவை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் நோக்கில் ஃபோக்ஸ்வேகன் அதன் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை களமிறக்க தீவிரம் காட்டி வருகின்றது.

நிறுவனம் பிரீமியம் வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே இந்த காரை இந்தியர்களுக்காக தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே அந்த பிரிவில் நல்ல டிமாண்டை ஸ்கோடாவின் புதிய கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பையின் நெரிசல் மிகுந்த சாலையிலேயே இந்த கார் காட்சி தந்திருக்கின்றது.

போக்ஸ்வேகனின் இந்த புதிய தயாரிப்பு பிரீமியம் தர தயாரிப்பு என்பதற்கு சான்றாக பல விபரங்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றன. ஸ்பை செய்யப்பட்டு இருக்கும் அந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அனைத்தும் எல்இடி தர லைட்டுகள் ஆகும். அத்துடன், ரூஃப் ரெயில், பின்பக்கத்தின் உயரமான பகுதியில் ஸ்டாப் லைட், கட்டுமஸ்தான பாடி பேனல்களை அதுக் கொண்டிருப்பது துள்ளியமாக தெரிகின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை ஏற்கனவே ஃபோக்ஸ்வேகனின் சில எஸ்யூவி கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. டைகுன் மற்றும் விர்சுஸ் போன்ற எஸ்யூவி கார் மாடல்களிலேயே இந்த மோட்டார் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே ஃபோக்ஸ்வேகன் அதன் புதுமுக சப்4 மீட்டர் எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இது நிறுவனத்திற்கு வெற்றி பெற்றுக் கொடுக்குமா? இல்லையா? என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 22:04 [IST]
English summary
Upcoming volkswagen sub 4 meter suv spied in mumbai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+