கப்பலை கம்மி விலைக்கு வாங்க முடியுமா? கப்பல் மாதிரியான இந்த சொகுசு காரை வாங்க முடியும்.. விலையும் இவ்ளோதானா!!
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover India Limited) நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்ஜ் ரோவர் எவோக் (Range Rover Evoque) சொகுசு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரின் சிறப்புகள் மற்றும் விலை பற்றிய விபரங்களை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover India Limited) அதன் புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ஜ் ரோவர் எவோக் (Range Rover Evoque) சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 67.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் ஐந்து இருக்கைகள் கொண்ட சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். இந்த காரை ஐந்து விதமான நிற தேர்வுகளிலும் இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு ஆப்ஷன்களும் இதன் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் 201 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இத்தகைய பவர்ஃபுல் மோட்டார் ஆப்ஷனே ரேஞ்ஜ் ரோவர் எவோக்கில் வழங்கப்படுகின்றது. இந்த காரில் அப்டேட்டின்கீழ் பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஃப்ளோட்டிங் ரக ரூஃப், புதுமுக கிரில், எல்இடி டிஆர்எல்கள் உடன் கூடிய புதிய எல்இடி ஹெட்லைட், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இந்த காரின் உட்பக்கத்திலும் பல புதிய வசதிகளையும், சிறப்பம்சங்களையும் இந்த காரில் லேண்ட் ரோவர் வழங்கி இருக்கின்றது. 11.4 அங்குல வளைவான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிவி ப்ரோ தொழில்நுட்பத்துடன் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று ஏகப்பட்ட பிரீமியம் தர அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இத்துடன், 2 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், கேபினின் காற்றை வடிகட்டும் ஏர் ஃப்யூரிஃபையர், 3டி சரவுண்ட் வியூ வசதிக் கொண்ட கேமிரா ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இது இன்னும் ஏராளமான அம்சங்களை இந்த காரில் லேண்ட் ரோவர் வழங்கி இருக்கின்றது. மேலும், புதுப்பித்தலின்கீழ் இரண்டு புதிய நிற தேர்வுகளையும் இந்த காரில் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்திருக்கின்றது. ட்ரைபேக்கா ப்ளூ மற்றும் கொரிந்தியன் ப்ரோன்ஸே ஆகியவையே அவை ஆகும்.

இப்போதும் இந்த காரை டூயல் டோன் நிறம் கொண்ட காராகவே லேண்ட் ரோவர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கொரிந்தியன் ப்ரோன்ஸே அல்லது நர்விக் பிளாக் ரூஃப்-லேயே அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த காரின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆகியவற்றிற்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஃப்ரெஷ்ஷாக அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்ஜ் ரோவர் எவோக் சொகுசு காரை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு முந்தைய வெர்ஷனைப் போல மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









