எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஓர் கார் விற்பனையாளர் உலகின் மிக மிக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார் மாடலை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து ஒட்டுமொத்த கார் காதலர்களின் கவனத்தையும் தன் வசம் கவர்ந்து இருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நீங்க காசை வெட்டியாக தண்ணீர் போல செலவழிக்கக் கூடிய நபரா? நிச்சயம் இந்த செய்தியை மட்டும் தெரிஞ்சுக்கிட்டீங்க, கட்டாயம் இனி டீ குடிக்கக் கூட காசை எடுத்து செலவு பண்ண யோசிப்பீங்க. எப்படியாவது சீக்கிரமே காசை சேர்த்து வச்சு ஃப்ளோரிடாவுக்கு கிளம்பலாம்னு தயாராகுவீங்க.

Rolls royce wraith

அப்படி ஒரு அறிவிப்பையே அந்த பகுதியைச் சேர்ந்த ஓர் கார் விற்பனையாளர் தற்போது அறிவித்து இருக்கின்றார். அவர் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கிவ்-அவே (Give Away) செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றார். அவர் இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 240 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புக் கொண்டது ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் (Rolls-Royce Wraith) காரையே அவர்கள் இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை 2 கோடி ஆகும். இத்தகைய பிரமாண்ட விலை உயர்ந்த காரையே எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி வழங்க இருக்கின்றார் அந்த டீலர்.

Florida car dealership is giving rolls royce wraith

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இதற்கு விதிக்கப்பட்டு இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் காரை இலவசமாக பெற வேண்டும் எனில் புகாட்டி சிரோன் ஹைப்பர் (Bugatti Chiron Hyper) காரை நீங்கள் வேண்டும். இந்த காரை வாங்குபவர்களுக்கே கூடுதல் கட்டணமின்றி ரோல்ஸ் ராய்ஸ் விரைத் வழங்கப்பட இருக்கின்றது.

இலவசமாக வழங்கப்பட இருக்கும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் 2018 மாடல் ஆகும். விற்பனைக்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் புகாட்டி சிரோன் 2021 மாடல் ஆகும். 2 ஆயிரம் மைல்கள் (3,128 கிமீ) மட்டுமே அந்த கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அதனை விற்பனைக்கு அறிவித்து இருக்கும் டீலர் தெரிவித்து இருக்கின்றார்.

அதேவேளையில் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் 17 ஆயிரம் மைல்கள் (27 ஆயிரத்திற்கும் கிமீ தூரம்) வரை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆமாங்க, இரண்டுமே யூஸ்டு கார்கள்தான். இந்த யூஸ்டு கார்களை விற்பனைச் செய்யும் பொருட்டே கவர்ச்சிகரமான அறிவிப்பை ஃப்ளோரிடாவைச் சேர்ந்த யூஸ்டு கார் டீலர் அறிவித்து இருக்கின்றார்.

நேப்பிள்ஸ் மோட்டார்ஸ்போர்ட் எனும் கார் விற்பனையகமே இந்த அறிவிப்பிற்கு சொந்தக்கார நிறுவனம் ஆகும். இவர்கள் புகாட்டி சிரோன் காருக்கு விலையாக 3.85 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்ணயம் செய்திருக்கின்றனர். புகாட்டி சிரோன் ஹைப்பர் காரில் 8.0 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 1479 பிஎச்பி பவரையும் 1599 என்எம் டார்க்கையும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும். இதன் டாப் ஸ்பீடும் இதை போலவே மிகவும் அதிகமாக உள்ளது. மணிக்கு 420 கிமீ வேகத்தில் இந்த ஹைப்பர் கார் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃப்ளோரிடாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே அந்த விற்பனையாளர் இந்த கவர்ச்சிகரமான ஆஃபரை அறிவித்தார். ஆனால், அவருடைய அறிவிப்பு தற்போது உலக அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த காரை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரேனும்கூட வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏன் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவதும்கூட இந்த காரை வாங்கி இந்தியாவிற்குக் கொண்டு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 5:00 [IST]
English summary
Used car dealer announced rolls royce wraith free here is full details how you can get
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+