யூஸ்டு காரை வாங்க போறீங்களா? இந்த கார் மாடல்களே மார்கெட்டின் கிங்.. எந்த கலருக்கு டிமாண்ட் அதிகம்னு தெரியுமா!

இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையான வரவேற்பையே பயன்படுத்திய கார்களும் பெற்று வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உறுதிப்படுத்தும் கூடியசில புள்ளி விபரங்களையே பிரபல யூஸ்டு கார் விற்பனையாளரான ஸ்பின்னி தற்போது வெளியிட்டு உள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கான கிடைத்த விற்பனை வரவேற்பு பற்றிய தரவுகளையே வெளியிட்டு இருக்கின்றது. இந்த தரவுகளின் வாயிலாக எந்த நிறுவனத்தின் கார் மாடல் அதிகம் விற்பனையாகி இருக்கின்றது மற்றும் எந்த கலருக்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர் என்பது போன்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக யார் மத்தியில் பயன்படுத்திய வாகனங்களுக்கு அதிகம் வரவேற்புக் கிடைக்கின்றது?, பெட்ரோல் அல்லது சிஎன்ஜி, இதில் எதை மக்கள் அதிகம் விரும்பி செகண்ட் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் போன் விபரங்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Used car market

டாப் 3 கார் மாடல்: இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10) உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R) உள்ளது.

மூன்றாவது இடத்தை ரெனால்ட் க்விட் ( Renault Kwid) பிடித்திருக்கின்றது. இந்த கார் மாடல் இந்த இடத்தை மூன்றாவது முறையாக பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, கடந்த மூன்று காலாண்டுகளாக இந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் ரெனால்ட் க்விட் தக்க வைத்து வருகின்றது.

டாப் 3 கார் பிராண்டு: மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyunda) மற்றும் ஹோண்டா (Honda) இந்த மூன்று கார் பிராண்டுகளுக்கே இந்தியாவின் செகண்ட் ஹேண்டு கார் மார்க்கெட்டில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கின்றது. இதை தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்களும் கூறுகின்றன.

ஹோண்டாவின் சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) ஆகிய கார் மாடல்களுக்கு செகண்ட் ஹேண்டு கார் மார்க்கெட்டில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டாடாவின் தயாரிப்புகளுக்கும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், முன்பைக் காட்டிலும் அது லேசான சரிவைச் சந்தித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு அதிகரித்த வரவேற்பு: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேநிலையே செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டிலும் நிலவிக் கொண்டிருக்கின்றது. கடந்த காலாண்டைக் காட்டிலும் சுமார் 12 சதவீதம் விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.

எந்த மோட்டாருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கிறது? இந்தியாவில் டீசல் கார்களின் மீதான மக்களுக்கு குறைந்திருப்பதை செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் வாயிலாகவும் உறுதியாகி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் பெட்ரோல் கார்களுக்கே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. சுமார் 83 சதவீதம் பெட்ரோல் கார்களும், 12 சதவீதம் டீசல் கார்களுக்கும், 5 சதவீதம் சிஎன்ஜி கார்களுக்கும் வரவேற்புக் கிடைத்துள்ளது.

எந்த நிறத் தேர்விற்கு வரவேற்பு அதிகம்: இந்தியாவில் வெள்ளை நிற கார்களுக்கு ஃபேன்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக செகண்டு ஹேண்ட் கார் மார்க்கெட் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிரே நிறத்திற்கும், மூன்றாவது இடத்தில் சிவப்பு நிறத்திற்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட் மிக சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்களும் அமைந்திருக்கின்றன. மேலும், செகண்டு ஹேண்ட் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் முன்னணி கார் பிராண்டுகளும் இந்த மார்க்கெட்டை மையமாகக் கொண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2024, 11:00 [IST]
English summary
Used car market in india thrives amid rising new car prices
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+