ஏழைங்க ஒரு பழைய காரை கூட வாங்கீர கூடாதுனு நினைக்கறாங்களா? இதுக்கு பேசாம நடந்துதான் போகணும்னு நேரா சொல்லீரலாம்!

இந்தியாவில் வரும் ஜனவரி 1ம் தேதியில் கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்பட பல்வேறு நிறுவனங்களும், புத்தாண்டில் இருந்து கார்களின் விலையை உயர்த்துவது (Price Hike) குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. எனவே 2025ம் ஆண்டில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ, புதிய கார்களுக்கு பதிலாக யூஸ்டு கார்களை (Used Cars) வாங்கும் முடிவில் இருக்கின்றனர். ஆனால் அவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் யூஸ்டு கார்களுக்கு 2 ஸ்லாப்களின் கீழ் ஜிஎஸ்டி (GST) விதிக்கப்படுகிறது. அதாவது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட, அதே நேரத்தில் 1,200 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கார்கள் மற்றும் 1,500 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட டீசல் இன்ஜின் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

Used Cars - Nirmala Sitharaman

இந்த வகையின் கீழ் வராத மற்ற அனைத்து யூஸ்டு கார்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் அரசு மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அனைத்து வகையான யூஸ்டு கார்களும் ஒரே சீராக 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடக்கும்பட்சத்தில் தற்போது 12 சதவீத வரி விதிப்பின் கீழ் வரும், யூஸ்டு காம்பேக்ட் செடான் ரக கார்கள், யூஸ்டு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் மற்றும் யூஸ்டு ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகியவற்றின் விலை உயரலாம். அத்துடன் யூஸ்டு எலெக்ட்ரிக் கார்களின் விலையும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Used Cars

இந்தியாவில் ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) அவ்வப்போது கூடி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் டிசம்பர் 21ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, யூஸ்டு கார்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய கார்களை வாங்கினால் அதிகம் செலவு ஆகும் என்ற எண்ணத்தில்தான் பலரும் யூஸ்டு கார்களை வாங்குகின்றனர். யூஸ்டு கார்களை வாங்கும்பட்சத்தில், ஓரளவு பணத்தை சேமிக்க முடியும். ஆனால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்பட்டால், யூஸ்டு கார்களை வாங்குவதற்கும் சற்று அதிகமான தொகையை செலவு செய்ய நேரிடும்.

எனவே யூஸ்டு கார்களை வாங்கி, பணத்தை சேமிக்கலாம் என திட்டமிட்டுள்ளவர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர். யூஸ்டு கார்களுக்கான வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்படுமா? ஒரு வேளை மாற்றம் செய்யப்பட்டால், அது யூஸ்டு கார்களின் விற்பனையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னதாக புதிய கார்களின் விலை உயர்வால், யூஸ்டு கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால், யூஸ்டு கார்களின் விற்பனை குறைந்து விடுமோ? என்ற அச்சம், யூஸ்டு கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 14:08 [IST]
English summary
Used cars set to get expensive in india check all details here
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+