5 ஸ்டார் ஹோட்டல்களே தோற்றுப்போகும்! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா?

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதி கொண்ட வந்தே மாதத்தில் உருவாக்கியுள்ளது. இந்த ரயிலை புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன் முதல் 100 நாட்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் தற்போது செய்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் எந்த ரூட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மக்கள் மத்தியில் இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிக வேகத்தில் பயணிப்பதாலும் அதிக அம்சங்களுடன் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்ட ரயிலாக இது வடிவமைக்கப்பட்டு இருந்ததாலும், மக்கள் பலர் இந்த ரயிலை வரவேற்றனர். இதனால் இந்த ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

vande bharat sleeper

இந்தியாவில் இயங்கி வரும் ரயில்கள் எல்லாம் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட பகல் நேர வேலைகளாகவே இயங்கி வருகிறது. இந்நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் இரவு நேர ரயிலுக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த ரயில் தற்போது சோதனையில் இருக்கிறது.

தற்போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து வரும் நிலையில் புதிதாக அரசு ஆட்சி அமைத்த 100 நாட்கள் சாதனை திட்டத்தில் இந்த வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை எல்லாம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயங்கப் போகும் ரூட் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

vande bharat sleeper

அதன்படி புனே முதல் செகந்திராபாத் வரை தான் இந்த ரயில் இயக்க திட்டமிட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளும் தற்போது துரிதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ரூட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் சுமார் 8 மணி நேரம் 25 நிமிடத்தை பயண நேரமாக எடுத்துக் கொள்கிறது.

படுக்கை வசதியுடன் வரும்போது இது வெறும் 7 மணி நேரம் 25 நிமிடத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் இந்த ரயிலில் உள்ள அனைத்து விதமான சொகுசு வசதிகளையும் அனுபவித்து கொள்ளலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

vande bharat sleeper

தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலை விட படுக்கை வசதி கொண்ட வந்த படத்த ரயிலில் இன்னும் அதிகமான சொகுசு அம்சங்கள் இடம் பெற உள்ளது. முக்கியமாக இந்த வந்தே பாரத் ரயிலில் சென்சார் அடிப்படையிலான லைட்டிங் அம்சங்கள் இடம் பெறுகிறது. யாருமே இல்லாத இடத்தில் லைட் அணைந்து விடும். பயணிகள் வரும் போது தானாக சென்சார் அதை உணர்ந்து கொண்டு லைட்டுகளை ஆன் செய்துவிடும்.

அடுத்ததாக தற்போது உள்ள வந்தே பாரத் ரயிலை விட படுக்கை வசதி கொண்ட வந்தே மாதத்தில் சவுண்ட் ப்ரூஃப் சிஸ்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலுக்கு வெளியே இருக்கும் சத்தம் ரயிலுக்குள் பெரிய அளவில் கேட்காதவாறு சவுண்ட் ப்ரூஃப் செய்யப்படுகிறது. இதனால் படுத்துக்கொண்டே பயணம் செய்யும் பயணிகள் நிம்மதியாக தூங்கலாம்.

vande bharat sleeper

மேலும் இந்த வந்தே பாரத் ரயில்களில் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் இடத்தில் ஆட்டோமேட்டிக் கதவுகள் அமைக்கப்படுகின்றன. பயணிகள் வரும்போது தானாக இந்த கதவுகள் எல்லாம் திறந்துகொள்ளும். பயணிகள் யாரும் இல்லாத நேரத்தில் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். மேலும் இந்த கதவுக்கு இரு பக்கமும் கம்யூனிகேட் செய்யும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு வேளை கதவு திறக்காமல் பிரச்சனை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் கம்யூனிகேட் செய்ய வசதியாக இருக்கும்.

இதுபோக தற்போது உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஒவ்வொரு பெட்டியிலும் சாப்பிடுவதற்கு என்று தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் செல்லும் பயணிகள் சாப்பிட விரும்பினால் அந்த இடத்திற்கு சென்று சாப்பிடலாம் அங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் வீல் சேரில் வரும் பயணிகளும் சுலபமாக ரயிலில் ஏறவும், இறங்கவும் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த ரயில் பெட்டியில் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டுகள் எல்லாம் சொகுசு நிறைந்த பெட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும். எல்எச்பி கோசகளை விட இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சிறப்பாக இருக்கும்.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் உள்ள கழிவறைகள் தற்போது உள்ள கழிவறைகளை விட அதிக நவீன வசதி கொண்ட கழிவறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கழிவறை உள்ளே உள்ள வாஷ்பேஷன் தண்ணீர் வெளியே தெறிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவறையும், துர்நாற்றம் வெளியே வீசாதபடி தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்வே தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய வளர்ச்சிகளை எல்லாம் சந்தித்து வருகிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகளை இந்தியாவில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் பலர் வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். புல்லட் ரயிலுக்கு இணையாக பல்வேறு வசதிகள் கொண்டதாக இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படுவது நிச்சயம் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 10:35 [IST]
English summary
Vande bharat sleeper train likely from secunderabad to pune full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X