இவ்வளவு சூப்பரான காரை வாங்க ஆளே இல்லையா? எல்லாத்துக்கும் காரணம் இது தான்!
டொயோட்டா நிறுவனத்தின் 7 சீட்டர் காரான வில்பயர் கார் கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய விற்பனை சரீவை சந்தித்துள்ளது. ஒரு மாதம் முழுவதும் வெறும் ஐந்து கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களையும் இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன என்ற தகவல்களை நமக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் 7 சீட்டர் செக்மெண்டில் வில்பயர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டொயோட்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 18,200 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் டொயோட்டா நிறுவனத்தின் 7 சீட்டர் காரான வில்பயர் கார் வெறும் 5 கார்களே விற்பனையாகியுள்ளன. இது கடந்த மார்ச் மாதம் விற்பனையான எண்ணிக்கையை ஒப்பிடும்போது 86.84% விற்பனை வீழ்ச்சியாகும்.
இந்த விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது இந்த காருக்கான காத்திருப்பு காலம் தான். தற்போது இந்த கார் வாங்க வேண்டும் என்றால் சுமார் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் கடந்த ஆறு மாதமாகவே இந்த காரின் விற்பனை மெல்ல மெல்ல சரிந்து கொண்டே தான் இருக்கிறது.

இதன்படி இந்த கார் கடந்த 2023 நவம்பர் மாதம் 53 கார்களும், டிசம்பர் மாதம் 37 கார்களும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 61 கார்களும், பிப்ரவரி மாதம் 57 கார்களும், மார்ச் மாதம் 38 கார்களும் விற்பனையாகி உள்ளன. இதுவரை இரட்டை இலக்க எண்ணிக்கையில் விற்பனையான கார் எண்ணிக்கை என்பது கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய சரிவை சந்தித்து வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
இந்த ஐந்து கார்களும் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புக் செய்தவர்களுக்கான டெலிவரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கார்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த காரில் உள்ள அம்சங்களுக்காகவே இந்தியர்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

டொயோட்டா வில்பயர் காரை பொருத்தவரை இந்தியாவில் ரூபாய் 1.20 கோடி முதல் ரூபாய் 1.30 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் ஹை மற்றும் விஐபி எக்ஸிகியூடிவ் லாஞ்ச் ஆகிய இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனையாகி வருகிறது. இதில் நான்கு சீட்டர் மற்றும் ஏழு சீட்டர் என இரண்டு வகையான சீட்டிங் ஆப்ஷன்களும் உள்ளன.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 193 பிஎஸ் பவரையும் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 15 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் டூயல் பேனல் சன்ரூஃப், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் 14 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட், 14 கலர் கொண்ட ஆம்பியன்ஸ் லைட்டிங் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் மெமரி பங்க்ஷன் ஆகியவையும் இந்த காரில் உள்ளன.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய அம்சங்களும் இந்த காரில் உள்ளது. இதனால் இந்த காரை பெரும் பணக்காரர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பிரபலங்கள் என பலர் வாங்கி வருகிறார்கள். முக்கியமாக நடிகர் நடிகைகளுக்கு இந்த கார் சிறந்ததாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை என்பது மிக குறைவாக இருக்கும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் இந்த காரின் வடிவமைப்பு லுக் மற்றும் இந்த காரின் உள்ள மற்ற வசதிகளை எல்லாம் பார்க்கும்போது இந்த கார் பலருக்கு தேவையாக இருப்பதால் அதிக விலை இருந்தாலும் பெரும் பணக்காரர்கள் பலர் இந்த காரை வாங்கி வந்தார்கள். அதனால் இதன் விற்பனை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









