மேட்-இன் தமிழ்நாடு இ-கார்.. உலக புகழ்பெற்ற அரங்கை அலங்கரிக்க போகுதா! எல்லாரும் ஒரே இடத்துல குவிய போறாங்க!
வாகன காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இருக்கின்றது. இது ஓர் வாகன கண்காட்சி நிகழ்ச்சி ஆகும். டெல்லியிலேயே இந்த ஷோ நடைபெற இருக்கின்றது. ஜனவரி 17 தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த ஆட்டோ எக்ஸ்போ-வில் பன்னாட்டு நிறுவனங்கள் பல கலந்துக் கொண்டு தங்களின் எதிர்கால வாகனங்களைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். அந்தவகையில், வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனமும் அதன் தயாரிப்புகளை இந்த உலக புகழ்பெற்ற அரங்கைப் பயன்படுத்தி வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவிற்கான வாகனங்களை இந்தியாவிலேயே வைத்து தயாரிக்க இருக்கின்றது. இதற்காக மிகப் பெரிய வாகன உற்பத்தி ஆலையை அது தமிழகத்தில் உருவாக்கி வருகின்றது. தூத்துக்குடியிலேயே நிறுவனத்தின் பிரமாண்ட மின்சார வாகன உற்பத்தி ஆலை தயாராகிக் கொண்டிருக்கின்றது.

விரைவில் இங்கு வாகனங்களின் உற்பத்தி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வைத்து அதன் புதிய வாகனங்களை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வின்ஃபாஸ்ட் ஓர் புதுமுக வாகன உற்பத்தியாளர் என்பதால் அது என்ன மாதிரியான வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரபோகிறதோ என்பதே பலரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, இந்தியாவின் மின்சார வாகன பிரிவு போட்டி மிகுந்த ஒன்றாக மாறியிருப்பதால், அது அதிக சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் வாகனங்களையே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவை சவாலான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடையை ஆட்டத்தை பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ வாயிலாக தொடங்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டு உள்ளது.
இந்த மேடையைப் பயன்படுத்தி அது பலதரப்பட்ட கார் மாடல்களை இந்தியாவில் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இ34 (e34), விஎஃப்3 (Vf3) மற்றும் விஎஃப்7 (Vf7) ஆகிய கார் மாடல்களையே அது அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார கார்களுக்கும், எம்ஜி மோட்டார் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார கார்களுக்கும் மிகப் பெரிய போட்டியாக அமையும்.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு எம்ஜி நிறுவனம் இந்தியாவில் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) எனும் தனித்துவமான திட்டத்தை அறிமுகம் செய்து, இதன் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.
இதுபோல சூப்பரான திட்டங்களை வின்ஃபாஸ்ட்-ம் இந்தியர்களுக்காக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தன்னுடைய பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இ-கார்களை மலிவான விலையில் அது விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வின்ஃபாஸ்ட் இ-கார்கள் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி பிராண்டுகள் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து காட்சிப்படுத்த இருக்கின்றனர். ஆகையால், அது இருக்கும் ஸ்டால்களில் கூட்டம் அலைமோதலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி இ-விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா இவி, எம்ஜி இசட்எஸ் இவி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி, ஹோண்டா எலிவேட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், 2025 ஆம் ஆண்டு இ-கார் காதலர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கக் கூடிய ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








