ஜாக்பாட்டை தட்டி சென்ற தூத்துக்குடி! ரூ16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது இவி கார் தயாரிப்பு ஆலை!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட் இந்நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைத்து இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் தனது விற்பனையை அதிகரிக்க இந்தியா மற்றும் தாய்லாந்தில் முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்த நிலையில் இந்தியாவில் தனது முதலீடு குறித்த இறுதிக்கட்ட நிலையை அந்நிறுவனம் எட்டியுள்ளது.

vinfast investment in tamil nadu

அதன்படி இந்தியாவில் தமிழகத்தில் அந்நிறுவனம் ஆலையமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக அந்நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் அந்நிறுவனம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்துட்டு உள்ளது.

இந்த இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி) முதலீட்டில் முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமா் ரூ4 ஆயிரம் கோடி) பணத்தை மட்டும் முதலீடு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிட்ட இலக்கை எட்ட வேண்டும் என்ற திட்டத்தை அந்நிறுவனம் எடுத்து வைத்துள்ளது.

இதற்காக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் தான் அந்நிறுவனம் தனது ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் அமைக்க போகும் ஆலையில் ஆண்டிற்கு 1.5 லட்சம் அளவிலான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் டிரெண்ட் அதிகமாகி வரும் நிலையில் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை அதிகரிக்கும். இதை கருத்தில் வைத்து தான் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் இந்தியாவில் தனது காலடிதடத்தை பதித்து வருகின்றன. அதன்படி தான் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் தனது ஆலையை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டிலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த ஆலைக்கான பணிகளை துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலயம் மூலம் சுமார் 3000 முதல் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் செய்ய உள்ள முதலீடு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான முதலில் இருக்கிறது. இந்நிறுவனம் உருவாக்கப்போகும் மூன்றாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு ஆலையாக தூத்துக்குடி ஆலை இருக்கப் போகிறது.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை பொருத்தவரை வியட்நாம் நாட்டை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திடம் எஸ்யூவி கார்களை அதிகம் விற்பனையாகி வருகின்றன ஐந்து நபர்கள் பயணிக்கும் எஸ்யூவி கார்கள் முதல் ஏழு நபர்கள் பயணிக்கும் எம்பிவி கார்கள் வரை நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அதேபோல தூத்துக்குடியில் இந்நிறுவனம் முதலில் பேட்டரி தயாரிப்பு அலையை தான் நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி இங்கு பேட்டரிகளை தயாரித்து இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. தற்போதைய நிறுவனம் செய்துள்ள முதலீடு என்பது இந்த பேட்டரி ஆலைக்குமாக சேர்த்து தான் முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் வாகன தயாரிப்பு மற்றும் பேட்டரி என இரண்டு ஆலைகளும் அங்கு அமைக்கப்படுகிறது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை களம் இறக்கும்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி பயன்படுத்தி கார்களை களம் இறக்க உள்ளதால் அந்த கார்களின் விலை நிச்சயம் குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டிய உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த ஆண்டு தனது ஆலையை கட்டமைக்கும் பணியை துவங்கினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆலையை தயாராக்கி வாகன உற்பத்தியை தயார் செய்யும் திறனை பெற்றுவிடும். அதன் பின்பு அந்நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடும். முதல் கட்டமாக வியட்நாம் நாட்டில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்த ஆலையில் அசெம்பிள் செய்து வாகனங்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 8, 2024, 12:43 [IST]
English summary
Vietnams vinfast to set up ev battery plant in tamil nadu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+