தூத்துக்குடி ஆலையில் வின்ஃபாஸ்ட் கார் எப்ப ரெடியாகும்? வெளியானது முக்கியமான அப்டேட்!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனம் தூத்துக்குடி பகுதியில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், இந்நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்து விடும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் முதலில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டத்தை தற்போது கைவிட்டுள்ளது. இது குறித்து விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக இந்நிறுவனம் சர்வதேச அளவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் இந்தியாவுக்கு வரப்போவதை அறிவித்தது.

VinFast

அதையடுத்து இந்தியா முழுவதும் இந்நிறுவனம் எங்கு ஆலையை அமைக்கலாம் என சோதனை செய்து கடைசியாக தூத்துக்குடி மாவட்டத்தில் எனது ஆலையை அமைக்க முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு மேற்கொண்டது. இதற்காக 400 ஏக்கர் அளவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆலையில் 3000 முதல் 3500 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆளை ஆண்டிற்கு 1.50 லட்சம் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 450 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

VinFast

முதற் கட்டமாக இந்நிறுவனம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தது. தற்போது அத்திட்டத்தை நிறுத்திவிட்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதாவது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்ய முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் இந்நிறுவனம் அமைத்து வரும் ஆலை 2025-ம் ஆண்டு முதல் பாதியிலேயே தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது இந்த ஆலையில் வைத்தே வாகனங்களை இந்நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படியாக தயாரிக்கப்படும் வாகனம் 2025-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

VinFast

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் வைத்து தயாரிக்கும் முதல் கார் ஒரு பிரீமியம் ரக எஸ்யூவி காரராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரூபாய் 25-30 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 300-500 கிலோமீட்டர் வரை உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தியாவில் வளரும் எலெக்ட்ரிக் வாகன மோகம் இந்த வாகனத்தின் விற்பனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் விஎஃப் இ34 என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனத்தை இந்நிறுவனம் இந்தியாவில் சோதனை செய்து வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கார் தான் நிறுவனம் தயாரிக்கும் முதல் காராக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த காரின் திறனை பொறுத்தவரை 148 பிஎச்பி பவரையும் 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் எக்கோ, கம்போர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று விதமான மோடுகளில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 41.9கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 318கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னர் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தன் காலடித்தலத்தை பதித்து விட்டால் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு கடும் போட்டியை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2024, 7:00 [IST]
English summary
Vinfast enter india 2025 locally assembled cars
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X