டெஸ்லாவிற்கு ஆப்பு வைக்கப்போகும் தூத்துக்குடி நிறுவனம்! இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்குது!

உலகின் மிக முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தனது பணிகளை முழு வீசி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களை குஷி படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் உலகில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்கள் உலகளவில் பிரபலமாக இருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டான இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைப்பதற்காக தயாராகி வருகிறது.

vinfast india launch

வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நாட்டில் ஏற்கனவே இந்நிறுவனம் சிறப்பாக வளர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்நிறுவனம் 11 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. இந்த 2024ம் ஆண்டு மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 59 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து அந்த நாட்டில் விற்பனை செய்துள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அந்நிறுவனத்தின் ஆலையை அமைப்பதற்காக முடிவு செய்து கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி தூத்துக்குடி பகுதியில் அந்நிறுவனம் ஆலையமைத்து வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vinfast india launch

இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப் 3 மற்றும் விஎஃப் 5 ஆகிய வாகனங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்துள்ளது. விஎஃப் 3 வாகனம் 5000 வாகனங்களும், எஃப் 5 2,600 வாகனங்களும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விற்பனையாகி உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை ஒப்பிடும்போது கடந்த அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனம் 21% அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. வியட்நாம் நாட்டில் தான் இந்த விற்பனை நடந்துள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமல்லாமல் கம்பஷன் இன்ஜின் வாகனங்களையும் அந்நாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. வியட்நாம் நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் இந்நிறுவனம் பெரிய புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக பாரத் குளோபல் கண்காட்சியில் தனது வாகனங்களை காட்சிப்படுத்திய மக்களின் கவனத்தை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் அரசுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக இந்நிறுவனம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த இறக்குமதி வரியில் இந்தியாவிற்குள் கொண்டு வந்து இந்தியாவிற்குள் அதை விற்பனை செய்து படிப்படியாக இந்தியாவிற்குள் நிறுவனம் ஆலையையும் விரிவாக்கி விரைவில் அந்த வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் வரும் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் டெஸ்டா நிறுவனம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கு பதிலாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனத்துக்கு முன்னதாகவே இந்நிறுவனம் இந்திய மார்க்கெட்டை பிடித்து விட்டால் டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் உலக அளவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனம் இந்தியாவில் வருவது பல்வேறு அரசியல் சூழ்நிலை சிக்கல்களை ஏற்படுத்தி வருவதால் நிறுவனம் இந்தியாவிற்குள் ஆலை அமைக்க தடுமாறி வருகிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது மார்க்கெட்டை பிடித்து விட்டால் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்காது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 22:59 [IST]
English summary
Vinfast india launch vietnam automaker debut weeks
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+