ஆலையை கட்டும் பணியையே இப்போதான் தொடங்கினாங்க.. அதுக்குள்ள இந்த வேலயை ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா! மாருதிக்கு ஆப்பு

வியட்நாமைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான பணிகளிலேயே அந்த நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான பணிகளை அந்த நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.

நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை தென் தமிழகத்திலேயே கட்டமைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான அஸ்திவாரம் போடும் நிகழ்வே சமீபத்தில் அரங்கேறியது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. வின்ஃபாஸ்ட் வாகன உற்பத்திக்காக சுமார் 400 ஏக்கர் நிலம் தூத்துக்குடியில் ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Vinfast vf3

இங்கேயே தற்போது மும்பரமாக கார் ஆலை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கம், அதே வின்ஃபாஸ்ட் நிறுவனம், வாகனங்களுக்கான இந்த வர்த்தக உரிமையைப் பெறும் (பேடண்ட் பதிவை செய்யும்) பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில்கூட அந்நிறுவனம் ஓர் குட்டியான எலெக்ட்ரிக் காருக்கு பேடண்ட் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், அந்த வாகனத்தின் பதிவிற்காக அது வழங்கிய ஆவணங்கள் பற்றிய விபரங்களே கசிந்திருக்கின்றன. நிறுவனம் தற்போது மிகவும் குட்டியான கார் மாடலுக்கே பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது.

Vinfast vf3 patented pic

இதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, நிறுவனம், அதன் சூப்பர் மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடலான விஎஃப்3 (VinFast VF3)-க்கே பேடண்ட் பதிவு செய்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற '2024 கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ' (2024 Consumer Electronics Show), வாயிலாகவே இந்த கார் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் மாடலுக்கான இந்திய வர்த்தக உரிமையைப் பெறும் முயற்சியிலேயே வின்ஃபாஸ்ட் களமிறங்கி இருக்கின்றது. இந்தியாவில் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்-பிரஸ்ஸோ மைக்ரோ எஸ்யூவி கார் மாடலை போன்ற மிகவும் குட்டியான தோற்றம் கொண்ட கார் மாடலே விஎஃப்3 ஆகும்.

Vinfast vf3 front design

உயரமான மற்றும் பெட்டி போன்ற தோற்றமே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. தேவைக்கேற்ற கிரவுண்ட் கிளியரன்ஸையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்தியாவின் அதிகம் ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் பள்ளம்-மேடு நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து நவீன கால அம்சங்களிலும் இந்த கார் அசத்தலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாக காரின் அலங்கரிப்பு யுக்திகள் இருக்கின்றன. குறிப்பாக, குரோம் பூச்சுக் கொண்ட வின்ஃபாஸ்ட் லோகோ, அதன் இரண்டு பக்கமும் அதே குரோம் பூச்சிலான பட்டை மற்றும் அதன் முனைகளில் எல்இடி லைட் வழங்கப்பட்டு இருப்பது அந்த காருக்கு மிகப் பெரிய பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது.

இதே ஸ்டைலிலேயே அக்காரின் பின் பக்கமும் இருக்கின்றது. ஆனால், லைட் மட்டும் அந்த குரோம் பட்டைகளுக்கு கீழே இடம் பெற்றிருக்கின்றது. மேலும், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது அனைத்தும் எல்இடி தர மின் விளக்குகள் என்றும் கூறப்படுகின்றது. தொடர்ந்து, இந்த காரின் பெட்டி போன்ற அவுட்லுக்கிற்கு ஏற்பவே இந்த காரின் லைட் மற்றும் ரியர் வியூ மிர்ரர்களும் சதுரமான தோற்றத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஒன்று ஈகோ, மற்றொன்று பிளஸ் ஆகும். சிங்கிள் மோட்டார் தேர்விலேயே இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும், இது ஓர் முழு சார்ஜில் 201 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி இது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களையும் வின்ஃபாஸ்ட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய தகவலையும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கால் தடம் பதிக்கும் பொருட்டு வின்ஃபாஸ்ட் நிறுவனம் வேக வேகமாக செயல்பட்டு வருகின்றது. இது ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்தியாவின் வெகுஜன வாகனச் சந்தையைக் குறி வைத்தே இது கால்தடம் பதிக்க இருக்கின்றது.

ஆகையால், இதன் வருகை இந்தியாவில் மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு தேவைப்படும் சிறிய வகை காருக்கு அது பேடண்ட் பதிவைத் தற்போது செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 16:35 [IST]
English summary
Vinfast patented vf3 supermini electric suv in ndia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X