அமெரிக்காலாம் ஓரமா போய் விளையாடு! உலகையே அண்ணாந்து பாக்க வைத்த தமிழ்நாடு! சத்தமே இல்லாம சம்பவம் செய்த ஸ்டாலின்
வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, தூத்துக்குடியில் (Thoothukudi) அமைக்கப்படவுள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding - MoU) சமீபத்தில் கையெழுத்தானது.
இது தமிழ் நாடு அரசின் (Tamil Nadu Government) சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முதற்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. இதுதான் இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் வரும் பிப்ரவரி 25ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த தூத்துக்குடி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. கூடவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளன. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த தூத்துக்குடி தொழிற்சாலை மூலமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஆரம்பத்தில் 2-3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக விஎஃப் இ-34 (VF e-34) எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சந்தைக்கான இந்த நிறுவனத்தின் முதல் காராக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை தொடர்ந்து விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 (VF7) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. கூடிய விரைவிலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் இந்திய சாலைகளில் பார்க்க போகிறோம் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் டெஸ்லாவின் (Tesla) போட்டி நிறுவனம்தான் வின்ஃபாஸ்ட். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருமா? வராதா? என்பது இன்னும் ஒரு குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது. ஆனால் அதன் போட்டி நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தொழிற்சாலையையே கட்டமைக்க போகிறது.
இது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் இந்திய வருகைக்காக காத்து கிடந்து நொந்து நூடூல்ஸ் ஆன வாடிக்கையாளர்கள், வின்ஃபாஸ்ட் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பலாம். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள், டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு, விலை குறைவான மாற்று தேர்வாக கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








