இந்திய மார்க்கெட்டை ஒரு கை பார்க்க வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்.. முழுசா மறைப்புகளுடன் காட்சி தந்திருக்கு!

இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான பணிகளை மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது, உலக புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் இந்த இரண்டையும் இந்தியாவில் விற்பனைச் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இவற்றை தயாரிப்பதற்கான ஆலையையே தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இதன் கட்டுமான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று முழுமையான மறைப்புகளுடன் இந்திய சாலையில் வலம் வரும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த செயல், கார் உற்பத்தி ஆலை தயாராகுவதற்குள், அது தன்னுடைய தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடுமோ என நினைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நினைக்கலாம் வேண்டாம், இதைதான் வின்ஃபாஸ்ட் செய்ய இருக்கின்றது. நிறுவனம் முதலில் அதன் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் சிலவற்றைய முழுமையாக கட்டமைக்கப்பட்ட அலகுகளாகவே (CBU) நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

Vinfast vf e34 spotted in india

Image Courtesy: Avinash Anushe/Rushlane Spylane பின்னர், உள்ளூரில் அமைக்கப்பட்டு வரும் உற்பத்தி ஆலை தயாராகியதும், அங்கு தயாரிக்கும் வாகனங்களை இந்தியாவில் அது விற்பனைச் செய்யும். நிறுவனம் அதன் வாகன உற்பத்தி ஆலை கட்டுமான பணிகளை இந்த பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை சோதனையோட்டம் செய்யும் பணிகளிலும் அது தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கின்றது.

தற்போது, சோதனையோட்டம் செய்யப்பட்டு இருப்பது வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 (VinFast VF e34) மாடலே ஆகும். இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கிரெட்டா இவி, கர்வ் இவி மற்றும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 கார் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தால் அது பற்றிய விபரங்களை பெரிய அளவில் அறிய முடியவில்லை. இருப்பினும், அந்த கார் பற்றிய சில முக்கிய விபரங்கள் மட்டுமே தற்போது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, வியட்நாமில் தற்போது விற்பனையில் இருக்கும் விஎஃப் இ34 மாடலுடன் இது மிகப் பெரிய அளவில் ஒத்துப் போவதை நம்மால் காண முடிகின்றது.

வியட்நாமிற்கான விஎஃப் இ34 நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்பைக் கொண்டிருக்கும். இதேதான் இந்தியாவில் காட்சி தந்த விஎஃப் இ34லும் இடம் பெற்றிருக்கின்றது. இதேபோல், ஹெட்லேம்பிற்கு மேலே டிஆர்எல்-கள், பூமராங்-ஸ்டைலிலான பனி மின் விளக்கு, கவர்ச்சியான பம்பர் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து, இந்த காரின் பாடி பேனல்கள் மென்மையானதாகவும், வளைவானதாகவும் உள்ளது. எனவே இந்த கார் பார்க்க மிகவும் டீசன்ட் லுக்குடன் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பக்கவாட்டு பகுதியில் காரின் கவர்ச்சியான லுக்கிற்காக பாடி கிளாடிங், 5 ஸ்போக் அலாய் வீல்கள், உடல் வண்ணத்திற்கு ஒத்த கதவு கைப்பிடிகள், குரோமால் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல் மற்றும் உடல் நிறத்திலான தூண்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஓஆர்விஎம்-களில் 360 டிகிரி பார்வைத் திறன் கொண்ட கேமிரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் ஆகியவை இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. வியட்நாமில் விற்பனையில் உள்ள விஎஃப் இ34 எலெக்ட்ரிக் காரில் 10 அங்குல செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 அங்குல முழு வண்ண இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, காற்றோட்டமான இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஒய்-ஃபை இணைப்பு, சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இதே அம்சங்கள் இந்தியாவிற்கான விஎஃப் இ34 எலெக்ட்ரிக் காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் அமைப்பு, 6 ஏர்பேக்குகள் மற்றும் பின்புறத்திற்கான பார்க்கிங் கேமரா ஆகியவை இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடாஸ் தொழில்நுட்பமும் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் இடம் பெறும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல எதிர்பார்ப்புகள் இந்த எலெக்ட்ரிக் காரில் உள்ளன.

தற்போது வியட்நாமில் விற்பனையில் உள்ள விஎஃப் இ34 எலெக்ட்ரிக் கார் மாடலில் 41.9 kWh எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். மேலும், ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான டிரைவிங் மோட்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 130 கிமீ ஆகும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 318.6 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதுபோன்று அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களையே வின்ஃபாஸ்ட் இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மேலும், தமிழ்நாடு ஆலையில் தயாரிக்கப்படும் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு விரைவில் அதன் கால்தடத்தைப் பதிக்க இருக்கின்றது. ஆனால், நிறுவனம் முதலில் எந்த எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் என தெரியவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 23, 2024, 5:00 [IST]
English summary
Vinfast vf e34 electric car spotted in india
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+