இந்த காரோட விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவிலேயே கம்மி ரேட் கார் வரப்போகுது!
வின்ஃபாஸ்ட் நிறுவனம் டாடா மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் முதலில் பிரிமியம் ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினாலும் பின்னர் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஆலை கட்டமைக்கும் பணி தற்போது துவங்க உள்ள நிலையில் விரைவில் அந்த ஆலை கட்டமைக்கப்பட்டு அதில் வாகனங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பிசினஸை துவங்கும் போது முதலில் டூவீலர் மற்றும் அதன் பிறகு 4 வீலர் என வரிசையாக தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மற்ற நிறுவனங்களைப் போல வின்ஃபாஸ்ட் நிறுவனமும் முதலில் பிரீமியம் தயாரிப்புகளை மட்டும் வெளியிட்டு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு பின்னர் படிப்படியாக குறைந்த விலை வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் சர்வதேச அரங்கில் விற்பனை செய்து வரும் விஎஃப்3 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான காப்புரிமைக்கான விண்ணப்பம் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. இதுதான் நிறுவனத்தின் சிறிய ரக எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும். ஆனால் இந்தியாவில் தற்போது சிறிய ரக எலெக்ட்ரிக் காராக இருக்கும் எம்ஜி கொமெட் இவி காரை விட இந்த விஎஃப்3 கார் சற்று பெரிய காராக உள்ளது.

இந்த கார் மொத்தம் 3114மிமீ நீளம் கொண்டது. மேலும் 16இன்ச் வீல் கொண்ட காராக இருக்கிறது. மற்ற கார்களை காட்டிலும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன் பக்க கிரில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பக்கம் 10இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியன உள்ளன. இந்த காரின் பூட் பகுதியை பொருத்தவரை 550லிட்டர் இட வசதி இருக்கிறது.
வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது இதில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவிற்கு இந்த காரை கொண்டு வரும்போது முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கும் படி இந்த காரை மாற்றியமைத்து இந்தியாவில் உள்ள ஆலையிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் குறைந்த விலையில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர முடியும். தற்போது ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வரும் நேரத்தில் மார்க்கெட்டில் உள்ள குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை விட இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த கார் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகன காராக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் பிரீமியம் ரக எலெக்ட்ரிக் காரை தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் படிப்படியாக இந்நிறுவனம் மற்ற கார்களையும் அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை டாடா மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் தான் விற்பனை செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் தரமான கார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இதற்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் நிறுவனமும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் பெட்ரோல்,டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்கும். எலெக்ட்ரிக் கார்கள் இப்படி பார்த்தாலும் பெட்ரோல் டீசல் கார்களை விட லாபம் என்று ரீதியில் எலெக்ட்ரிக் காரர்கள் விற்பனைக்கு வரும். இதனால் ஆரம்ப கட்ட காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.


Click it and Unblock the Notifications








