ஒரு மணிநேரத்துக்கு கிட்டத்தட்ட 500 பேர் புக் செய்யும் எலக்ட்ரிக் கார்!! விலை இவ்வளவு கம்மியா இருக்குதே!

வின்ஃபாஸ்ட் வி.எஃப்3 (Viinfast VF3) எலக்ட்ரிக் காருக்கு வியாட்நாமில் வெறும் 66 மணிநேரங்களில் சுமார் 27 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்திருப்பது பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் அப்படி என்ன உள்ளது? என்பதையும், இந்தியாவிலும் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்குவர வாய்ப்புள்ளதா என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நம் இந்தியாவில் கொஞ்சம் மெதுவாகவே அதிகரித்து வருகிறது என்றாலும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வருடங்களில் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவில் நிறைய பகுதிகளில் உங்களால் எலக்ட்ரிக் கார்களை காணாமல் இருக்க முடியாது. சீனா அளவிற்கு இல்லையென்றாலும், மற்றொரு தெற்காசிய நாடான வியாட்நாமிலும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை முன்னேற்றம் கண்டு வருகிறது.

vinfast vf3 electric car orders

வியாட்நாமில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் வி.எஃப்3 என்கிற பெயரில் அதன் புதிய காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை துவங்கியது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்வது இல்லை. வியாட்நாமில் வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலக்ட்ரிக் காரின் அறிமுக விலை 23.5 கோடி வியாட்நாம் டாங் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.7.69 லட்சம் ஆகும். இந்த குறைவான விலை தான் வியாட்நாமில் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கஸ்டமர்களை வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலக்ட்ரிக் காருக்கு பெற்று தந்துள்ளது. எந்த அளவிற்கு குறுகிய காலம் என்றால், வெறும் 66 மணிநேரத்தில், அதாவது 2 நாட்கள் 18 மணிநேரத்தில் வியாட்நாமில் இந்த எலக்ட்ரிக் காருக்கு சுமார் 27,649 புக்கிங்குகள் கிடைத்துள்ளன.

அதாவது, ஒவ்வொரு மணிநேரத்திலும் சராசரியாக 400இல் இருந்து 450 பேர் காரை முன்பதிவு செய்துள்ளனர். ரூ.7.69 லட்சம் என கூறினோம் அல்லவா... அந்த விலையில் பேட்டரி இல்லாமல் வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலக்ட்ரிக் கார் கிடைக்கும். அதாவது, பேட்டரியை மாதச்சந்தா முறையில் பயன்படுத்த வேண்டியிருக்கும். பேட்டரி உடன் சேர்த்து இந்த வி.எஃப்3 எலக்ட்ரிக் காரின் விலை 31.5 கோடி வியாட்நாம் டாங் (ரூ.10.31 லட்சம்) ஆகும்.

இவ்வளவு குறைவான விலையில் இத்தனை பேர் இந்த காரை புக் செய்திருப்பது ஆச்சிரியம் என்றால், அதை விட ஆச்சிரியம், புக்கிங் தொகை மீட்கப்பட முடியாதவை ஆகும். அதாவது, கார் பிடிக்கவில்லை, வாங்க முடியவில்லை என பாதியில் கஸ்டமர்கள் புக்கிங்கை ரத்து செய்தால், காரை புக் செய்வதற்காக செலுத்திய டோக்கன் தொகையை மீண்டும் பெற முடியாது.

vinfast vf3 electric car orders

வியட்நாமில் வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலக்ட்ரிக் காருக்கு மே 13ஆம் தேதி முன்பதிவுகள் துவங்கப்பட்டன. இந்த எலக்ட்ரிக் காருக்கு 7 வருட அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் வழங்கியுள்ளது. அதுவே, இந்த காரின் பேட்டரிக்கு 8 வருட வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது. புக் செய்தவர்களுக்கு விஎஃப்3 எலக்ட்ரிக் கார்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்திற்கு உள்ளாக குறைந்தது 20,000 விஎஃப்3 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விஎஃப்3 எலக்ட்ரிக் காரின் நீளம் 3,190மிமீ, அகலம் 1,678மிமீ மற்றும் உயரம் 1,620மிமீ ஆகும். காருக்கு பின்பக்கத்தில் 550 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் பகுதி வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ மற்றும் பிளஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விஎஃப்3 எலக்ட்ரிக் கார் வியட்நாமில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் கார்களை விற்பனை செய்தது இல்லை; இனி விற்பனை செய்வதற்கும் வாய்ப்புகள் குறைவே. ஆகவே, விஎஃப்3 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவலை வேண்டாம், கிட்டத்தட்ட இதன் விலையில்தான் டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 20:33 [IST]
English summary
Vinfast vf3 electric car gets excessive orders in vietnam check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+