சென்னை டூ பெங்களூரு சிங்கிள் சார்ஜ்ல போயிடலாம்! ஃபோக்ஸ்வேகனின் முதல் இவி கார் இது தான்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஐடி.4 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஐடி.4 என்ற கார் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது. இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ள இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் இந்த காரின் இந்திய வருகை குறித்த அனைத்து விரிவான விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக தனது ஐடி.4 என்ற எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் அந்நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரப்போகும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் ஏற்கனவே ஐடி.4 ஜிடிஎக்ஸ் என்ற காரை கடந்த 2023-ம் ஆண்டு காட்சிப்படுத்தியிருந்தது.

தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 என்ற கார் முன்பக்கம் ஷார்ப்பாக ஹெட்லைட்டுகளைக் கொண்டதாக இருக்கிறது. மேலும் பின்பக்க லைட் பாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டை பொருத்தவரை சிம்பிளான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்புறம் 12 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டிரைவருக்காக 5.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.4 காரின் சர்வதேச மாடல் காரைப் பொறுத்தவரை இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. சிங்கிள் மோட்டார் மற்றும் டூயல் மோட்டார் என இரண்டு விதமான வேரியன்ட்கள் இந்த காரில் உள்ளன. இது வாகனத்தின் பவரை பொறுத்து மோட்டார் செட்டப் வேரியன்ட் என்பது மாறுபடுகிறது.

சிங்கிள் மோட்டார் வேரியன்டை பொறுத்தவரை 58 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 204 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் மோட்டாரை பொருத்தவரை ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட காராக விற்பனையாகி வருகிறது. ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லாத டூயல் மோட்டார் செட்டப் காரும் விற்பனையாகிறது.
டூயல் மோட்டார் செட்டப் கொண்ட வேரியண்ட் காரில் 77 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 334பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 410 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லாத ரியர்வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட காராக இருந்தால் 442 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவே சிங்கிள் மோட்டார் செட்டப் கொண்ட 58 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் விற்பனையாகி வரும் வேரியண்ட் காரை பொருத்தவரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 336 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் வகையில் ரேஞ்ச் தரும் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான மோட்டார் செட்டப் கொண்ட கார்களும் இந்தியாவில் உள்ள சராசரி ரேஞ்ச் பெறும் கார்களைவிட சிறப்பான ரேஞ்ச் கொண்ட கார்களாகவே உள்ளன.
இதில் எந்த வேரியண்ட் கார் இந்தியாவிற்கு வர போகிறது என்ற தகவலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. பெரும்பாலும் சிங்கிள் மோட்டார் செட்டப் கொண்ட வேரியண்ட் மட்டும் தான் இந்தியாவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. டூயல் மோட்டார் செட்டப் கொண்ட வேரியண்ட் கார்கள் விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் அதன் விற்பனை என்பது குறைவாக இருக்கவே அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இந்த எெலக்ட்ரிக் காரை தான் அந்நிறுவனம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் எதிர்காலத்தில் வரும் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது மார்க்கெட் பங்கை பிடிப்பதற்காக இந்த காரை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் களமிறங்கினால் நிச்சயம் சிறப்பான விற்பனையை பெறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் செக்மெண்டில் ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான விழிப்புணர்வு அதிகமாகி வரும் நிலையில், அடுத்து எலெக்ட்ரிக் கார்களையும் மக்கள் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மக்கள் மனதில் இடம் பெறும்.


Click it and Unblock the Notifications









