ஃபோக்ஸ்வேகன் காரை யூஸ் பண்றவங்களுக்கு செம்ம லக்!! சர்வீஸுக்கு இனி ரொம்ப தூரம் போக வேண்டி இருக்காது!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் சென்னையில் அதன் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீலர்ஷிப் நெட்வொர்க் விரிவடைந்துள்ளது. இதுகுறித்தும், ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய டீலர்ஷிப் ஷோரூமை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்கை புதிய ஷோரூம் மூலமாக விரிவுப்படுத்தி உள்ளது. இந்த புதிய டீலர்ஷிப் ஷோரூமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலமாக, தமிழ்நாட்டில் ஃபோக்ஸ்வேகன் ஷோரூம்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

volkswagen india inaugurates new showroom

அதேநேரம், ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கான சர்வீஸ் மையங்கள் தமிழ்நாட்டில் 20 இடங்களில் உள்ளன. ஃபோக்ஸ்வேகனின் இந்த 26 விற்பனை மையங்கள் மற்றும் 20 சர்வீஸ் மையங்கள் தமிழ்நாட்டின் 21 நகரங்களில் அமைந்துள்ளன. குன் கேபிட்டல் மோட்டார்ஸ் என்கிற பெயரில் சென்னையில் திறக்கப்பட்டுள்ள புதிய டீலர்ஷிப் ஷோரூமுக்கு அருண் உப்புசாமி என்பவர் மேலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மொத்தம் 70 சேல்ஸ் & சர்வீஸ் பணியாளர்கள் குன் கேபிட்டல் மோட்டார்ஸில் பணியாற்ற உள்ளனர். ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய ஷோரூமின் அறிமுக நிகழ்ச்சியில் 5 ஃபோக்ஸ்வேகன் கார்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளன. இதில், க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்ற விர்டுஸ் மற்றும் டைகுன் கார்களும், இந்தியாவில் விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் காரான டிகுவானும் அடங்குகின்றன.

volkswagen india inaugurates new showroom

இந்த புதிய டீலர்ஷிப் ஷோரூமில் கார்களை சர்வீஸ் செய்வதற்கான வொர்க் ஷாப்பும் தனியாக அமைந்துள்ளது. சென்னையில் அம்பத்தூரில் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட் பகுதியில் இந்த புதிய டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. குன் கேபிட்டல் மோட்டார்ஸ் டீலர்ஷிப் ஷோரூமின் முழு முகவரி பின்வருமாறு, எண்.4-பி, 3வது மெயின் ரோடு, இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600058.

புதிய குன் கேபிட்டல் மோட்டார்ஸ் ஷோரூம் உடன் சேர்த்து இந்தியாவில் சுமார் 155 நகரங்களில் 208 விற்பனை மையங்களும், 142 சேவை மையங்களும் உள்ளன. புதிய ஷோரூம் மையம் திறக்கப்பட்டு இருப்பது குறித்து ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், "இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முக்கிய சந்தைகளில் ஒன்று சென்னை பெருநகர பகுதி.

volkswagen india inaugurates new showroom

2023ஆம் ஆண்டில், எங்கள் விர்டுஸ் இந்திய சந்தையில் அதிக விற்பனையான செடான் கார்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதிலும் பிரீமியம் தரத்திலான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எங்களின் புதிய டச் பாயிண்ட்டின் மூலம் எங்களது கார்களை வாங்குவதையும், அவற்றிற்கான சேவையை பெறுவதிலும் இன்னும் அணுகக்கூடியதாக மாற்றும் வகையில் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற கார் நிறுவனங்களை போன்று ஃபோக்ஸ்வேகனுக்கும் இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமெனில், இவ்வாறு புது, புது டீலர்ஷிப் ஷோரூம்களை திறப்பது அவசியமாகும். ஃபோக்ஸ்வேகனின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு http://www.volkswagen.co.in/ என்கிற வெப்சைட்டை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2024, 18:54 [IST]
English summary
Volkswagen india inaugurates new dealership showroom in chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X