பழைய கார தூக்கி போடுறதுக்கான நேரம் வந்தாச்சு.. சில நாட்களுக்கு மட்டுமே இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டம் கிடைக்குமாம்!
பிரபல கார் (Car) உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 'மெகா எக்ஸ்சேஞ்ச் கார்னிவல் 2024' (Mega Exchange Carnival 2024) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 2024 ஜூலை 3 ஆம் தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு சலுகைக் கிடைக்கும் என ஃபோக்ஸ்வேகன் அதன் அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய காரை ஓட்டிச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய கையோடு, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் யூஸ்டு கார் விற்பனை பிராண்டின் பெயரையும் மாற்றி இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

தாஸ் வெல்ட் ஆட்டோ (Das WeltAuto) எனும் பெயரில் இருந்து ஃபோக்ஸ்வேகன் சர்டிஃபைடு ப்ரீ ஓவ்னட் (Volkswagen Certified Pre Owned) என்கிற பெயரே சூட்டப்பட்டு உள்ளது. பிராண்டின் வலிமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் விதமாக இந்த மறுபெயரிடுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய கார் விற்பனையில் பெற்றுக் கொண்டிருப்பதைப் போலவே யூஸ்டு கார் விற்பனையிலும் மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு விற்பனை வளர்ச்சியை பிராண்டின் யூஸ்டு கார் பிரிவுக் கண்டுள்ளது.

இந்த வளர்ச்சியின் வாயிலாக நாட்டின் முன்னணி யூஸ்டு கார் நிறுவனங்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் மாறியுள்ளது. இந்த கார் தன்னுடைய செகண்ட் ஹேண்டு கார் பிரிவின் வாயிலாக சொந்த நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமின்றி பலதரப்பட்ட பிராண்டுகளின் கார்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய பிராண்டிற்கு வலுசேர்க்கும் விதமாக அதற்கு மறுபெயரிடப்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய இந்த பிரிவின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு யூஸ்டு கார் விற்பனையகங்களை அதிகளவில் திறக்கும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், முதன் முதலில் புதிய பெயரான 'ஃபோக்ஸ்வேகன் சான்றளிக்கப்பட்ட ப்ரீ-ஓன்ட்' கார் ஷோரூம் இன்று (ஜூலை 4) கோவையில் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த புதிய பெயரில் தன்னுடைய செகண்ட் ஹேண்டு கார் விற்பனையகத்தை ஃபோக்ஸ்வேகன் திறக்க இருக்கின்றது. மேலும், ஏற்கனவே உள்ள விற்பனையகத்தின் பெயர்களையும் அது மாற்றிக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆட்டோஃபெஸ்ட் மெகா எக்ஸ்சேஞ்ச் கார்னிவலின் வாயிலாக பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஃபோக்ஸ்வேகன் காரை ஓட்டி செல்லும் வாய்ப்பை வழங்கும் ஃபோக்ஸ்வேகன் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றது.
எக்ஸ்சேஞ்ச் வாயிலாக காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாகவும் அது அறிவித்து இருக்கின்றது. தற்போது நாடு முழுவதும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 139 டச்-பாயிண்ட்கள் யூஸ்டு கார் வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதில், 36 பிரத்யேக (exclusive certified pre-owned) விற்பனை நிலையங்களாக செயல்படுகின்றன.
இந்த நெட்வொர்க்கை கட்டம் கட்டமாக விரிவுபடுத்த தற்போது ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் மார்ச் 2025க்குள் புதிய விற்பனையகங்களை நிறுவ அது பிளான் போட்டு இருக்கின்றது. தன்னிடம் உள்ள யூஸ்டு கார்களை அது குறிப்பிட்ட சில ஆய்விற்கு உட்படுத்தி அதன் தரத்தை எந்தவொரு மறைப்பும் இன்றி தகவலாக வழங்கும். எனவே, தரத்தில் எந்த தவறும் ஏற்படாது என நிறுவனம் நம்பிக்கை வாக்களித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய கார்களைப் போலவே யூஸ்டு வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் மாருதி சுஸுகி தொடங்கி ஃபோக்ஸ்வேகன் போன்ற பிரீமியம் மற்றும் லக்சூரி கார் உற்பத்தியாளர்களும் செகண்ட் ஹேண்டு கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








