டாடா கார்கள் மட்டும்தான் பாதுகாப்பானது நினைச்சுட்டு இருக்கீங்களா.. இதோ பாருங்க அதுக்கே டஃப் கொடுக்கும்போல இவை!
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் டைகுன் எஸ்யூவி (Taigun SUV) மற்றும் விர்சுஸ் செடான் (Virtus sedan ) ஆகியவையும் அடங்கும். இரண்டுமே ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) பிராண்டின் தயாரிப்பு ஆகும். இந்த காரின் பாதுகாப்பு தரத்தையே இன்னும் அதிகப்படுத்தி இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன். அதாவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் முக்கிய அம்சத்தை அதிக எண்ணிக்கையில் வழங்க இருப்பதை கட்டாயமாக்கி இருக்கின்றது. அது என்ன அம்சம்? அந்த அம்சம் எத்தனை வழங்கப்பட இருக்கின்றது? இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்கவுள்ளம். வாங்க பதிவிற்குள் போகலாம்.
கார்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இவற்றையே டைகுன் எஸ்யூவி மற்றும் விர்சுஸ் செடான், இந்த இரண்டு கார் மாடல்களிலும் ஆறு வழங்கப்படும் என ஃபோக்ஸ்வேகன் அறிவித்து இருக்கின்றது. அதாவது, இரண்டு கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர் பேக்குகளை ஃபோக்ஸ்வேகன் கட்டாயப்படுத்தி இருக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஸ்கோடா நிறுவனம் கடைபிடிக்கும் சில திட்டங்களைத் தீவிரமாக கடைபிடித்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஸ்கோடா நிறுவனமும் சமீபத்தில் அதன் குஷாக் எஸ்யூவி (Kushaq SUV) மற்றும் ஸ்லேவியா செடான் (Slavia Sedan) ஆகிய கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகழிலும் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயப்படுத்தியது.
இந்த திட்டத்தையே தற்போது கடைபிடித்து டைகுன் மற்றும் விர்சுஸில் அறிமுகம் செய்திருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன். இதனால் இந்த கார் மாடல்களின் பாதுகாப்பு தரம் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு கார் மாடல்களும் ஏற்கனவே பாதுகாப்பு விஷயத்தில் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
முன்னதாக, ஆறு ஏர்பேக்குகள் உயர்நிலை கார் மாடல்களான டாப்-லைன் ஆப்ஷன் மற்றும் ஜிடி வேரியண்ட் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. பாதுகாப்பு தரப்பட்டதன் காரணத்தினால் விலையில் ஏதேனும் ஏற்றம் செய்யப்பட்டு இருக்குமோ என அஞ்ச வேண்டாம். இதன் விலையில் எந்த மாற்றத்தையும் ஃபோக்ஸ்வேகன் செய்யவில்லை.
இந்த சிறப்புடன் கூடுதலாக விலை சலுகையையும் அது அறிவித்து இருக்கின்றது. அந்தவகையில், ரூ.70 ஆயிரம் வரை விலை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது டைகுன் ரூ. 10.99 லட்சத்துக்கே கிடைக்க தொடங்கி இருக்கின்றது. இன்னும் சில தினங்களுக்கு இந்த சிறப்பு சலுகை விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஆறு ஏர்பேக்குகளுடன் சேர்த்து இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இஎஸ்சி (ESC), மல்டி கொலிசன் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பிரேக் அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கட்டுப்பாடு ஆகியவையே வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த இரண்டு தயாரிப்புகளுக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்திலேயே இந்த இரண்டு கார் மாடல்களும் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. அந்தவகையில், அவை 1 லட்சம் யூனிட் விற்பனையை எட்டின. இதில், 61 சதவீதம் டைகனும், 39 சதவீதம் விர்சுஸும் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றிற்கு போட்டியாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே போட்டியை அதிகப்படுத்தும் நோக்கில் இதன் பாதுகாப்பு திறனை மேம்படுத்தி இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன். ஆகையால், இதற்கு கிடைக்கும் வரவேற்பு வரும் நாட்களில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








