கடையை இழுத்து மூட போறோம்ற மாதிரி சொல்றாங்க.. 3 உற்பத்தி ஆலையை இழுத்து மூட திட்டம்! அப்படினா ஊழியர்களோட நிலைமை!

வியாபாரம் சரியா இல்ல. கடையை இழுத்து மூட போகிறோம்-ன்னு சொல்லுற மாதிரி உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தங்கள் உற்பத்தி ஆலையை இழுத்து மூட இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அது இந்தியாவில் அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஜெர்மன் நாட்டிலேயே இந்த அறிவிப்பை ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அறிவித்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கானதாக இல்லை என்றாலும் இந்தியாவையும், உலகின் பிற நாடுகளையும் அதிர செய்யும் வகையிலேயே இந்த தகவல் அமைந்திருக்கின்றது.

நிறுவனம் ஜெர்மென்-இல் செயல்படும் மூன்று ஆலைகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவே தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவலை ஃபோக்ஸ்வேகன் பணிக் குழுவின் தலைவர் டேனியலா கேவல்லோ-வும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். ஃபோக்ஸ்வேகனின் இந்த அறிவிப்பால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை இழக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.

Volkswagen plans closure of three plants in germany

இதுவே ஒட்டுமொத்த உலகையும் அதிர செய்யும் வகையில் அமைந்து இருக்கின்றது. ஃபோக்ஸ்வகன் நிறுவனம் இந்த முடிவை செலவைக் குறைக்கும் பொருட்டே எடுத்து உள்ளது. மேலும், செலவைக் குறைத்து போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இழுத்து மூடல் அறிவிப்பிற்கு பின்னால் அந்த பிராண்டின் வாகனங்களுக்கான தேவை சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் குறைந்து வருவதும் மற்றும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே நிறுவனத்தை மறு சீரமைக்கும் இந்த முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Volkswagen plant wolfsburg

எனவே விரைவிலேயே நிறுவனம் மூன்று உற்பத்தி ஆலைகளை மூடுவது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஜெர்மனியில் உற்பத்தி ஆலைகளை மூடுவதற்கான பிளானை ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். இதனால்தான் இன்னும் பலரால் இந்த தகவலை ஜீரணிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.

இந்த நிறுவனம் இந்தியாவை விட்டும் வெளியேறிவிடும் முன்னதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அது 2.0 எனும் புதிய திட்டத்தை கையில் எடுத்து தற்போது இந்திய சந்தையை தக்க வைத்திருக்கின்றது. இந்த பிளானின்கீழ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த வாகனங்களுக்கு இந்திய கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மேலும், தற்போது நல்ல வரவேற்பு டிரெண்டை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அது புதிய புதிய பிளான்களையும் இந்தியாவிற்காக வகுத்து வருகின்றது. அந்தவகையில் சீனாவிற்காக தயார் செய்யப்பட்ட சிஎம்பி 21 (CMP 21) எனும் பிளாட்பாரத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் காரை தயார் செய்யும் பணியில் அந்நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை தயாரிப்பதற்காக தயார் செய்யப்பட்ட ஓர் தளமே சிஎம்பி 21 ஆகும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மலிவு விலை எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் எம்ஜி கோமெட் இவி மற்றும் டாடா டியாகோ இவி ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு போட்டியளிக்கும் வகையிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னுடைய விலை குறைவான எலெக்ட்ரிக் காரை சிஎம்பி 21 பிளாட்பாரத்தை பயன்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மலிவு விலை எலெக்ட்ரிக் கார் பிரிவில் டியாகோ இவி நல்ல விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அது 50 ஆயிரம் யூனிட்டுகளைக் கடந்து தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 11:52 [IST]
English summary
Volkswagen plans closure of three plants in germany amid restructuring
மேலும்... #volkswagen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X