நான் பொறந்ததுல இருந்தே அழகு.. இந்த கார் மாடல் 50 ஆண்டுகளாக விற்பனைல இருக்கா! அப்பவே ரொம்ப அழகா இருந்திருக்கு!
ஐந்து தசாப்தங்களாக ஓர் கார் மாடல் விற்பனையில் இருப்பது எல்லாம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். அப்படியாகவே ஓர் கார் இந்த உலகத்தில் விற்பனையில் இருந்து வருகின்றது. ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் மாடலே அது ஆகும். இந்த கார் மாடலை 1975 ஆம் ஆண்டில் தான் இந்த உலகத்திற்கு முதல் முறையாக ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது, இதன் ஆறாம் தலைமுறை வெர்ஷனே உலக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் மாடல் இப்போது விற்பனையில் இல்லை.
அது விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு பலமாதங்கள் ஆகின்றன. 2022 ஆம் ஆண்டிலேயே இந்த காரை விற்பனையில் இருந்து அகற்றியது ஃபோக்ஸ்வேகன். இந்த நிலையிலேயே உலக சந்தையில் போலோ கார் மாடல் ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த கார் மாடல் 2 கோடிக்கும் அதிகமான யூனிட் வரை விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இந்த கார் மாடல் 12 ஆண்டுகளாக விற்பனையில் இருந்தது. இதேபோல், இத்தனை ஆண்டுகளில் அது 3 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியது. உலக அளவில் கிடைத்ததைப் போலவே இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தது ஐந்தாம் தலைமுறை போலோ ஆகும்.
போட்டி அதிகரிப்பு காரணமாகவும், தன்னுடைய புதிய 2.0 உற்பத்தி யுக்தியின் காரணமாகவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை இந்திய சந்தையில் இருந்து அகற்றியது. மிகுந்த கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஓர் கார் மாடலே போலோ ஆகும். விற்பனைக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இப்போது வரை அது அதிக கவர்ச்சியான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.

இந்த காரை ஆடி 50 (Audi 50) கார் மாடலை தழுவியே உருவாக்கியது, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். ஸ்டைல் மற்றும் திறன் வெளிப்பாட்டிலும் இந்த காரை பிரதிபலிக்கும் வகையிலேயே போலோ இருந்தது. இதன் காரணத்தினாலேயே உலக அளவில் மிகப் பெரிய ரசிக பட்டாளம் இந்த கார் மாடலுக்கு உருவாகியது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு தலைமுறையின்போதும் ஒவ்வொரு சிறப்பம்சங்களைச் சேர்த்தே இந்த காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, இதன் மூன்றாம் தலைமுறை வேற லெவல் அட்வான்ஸ்டு அம்சங்களைக் கொண்டதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஏர்பேக்குகள் போன்ற புதுமையான அம்சங்களையே இந்த காரில் அது அறிமுகப்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக 2002 ஆம் ஆண்டில் முன் மற்றும் பக்கவாட்டு ஏர் பேக்குகள், பலர் ஸ்டியரிங் மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டில் இந்த காரில் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்டு அசிஸ்டன்ஸ் போன்றவைவும் போலோவில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது, இன்னும் பல நம்ப முடியாத அம்சங்களைத் தாங்கியதாக போலோ காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான அப்கிரேட் வேலைப்பாடுகளாலேயே இந்த கார் 5 தசாப்தங்களை தாண்டியும் விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனையில் இல்லாதது ஹேட்ச்பேக் கார் காதலர்களுக்கு சற்றே கவலையளிக்கக் கூடிய தகவலாக உள்ளது. வரவேற்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலேயே இதனை வெளியேற்றியது. அதேநேரத்தில், தன்னுடைய 2.0 திட்டத்தின் வாயிலாக போலோவைவிட இன்னும் அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் வசதிகளைத் தாங்கிய காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நிறுவனத்தின் யுக்திக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, 2.0 பிளானின் கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட அனைத்து கார் மாடல்களுக்கும் சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், விரைவிலேயே புதிய தலைமுறை போலோ சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








