அம்பாஸிடர் மாதிரி எல்லாருக்கும் பிடிக்கும்! இந்த கார் மறுபடியும் வரப்போகுதா! போட்டி நிறுவனங்கள் நடுக்கம்!

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ போட்டியிட்டு வந்தது.

இந்திய சந்தையில் கடந்த 2010ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பான கையாளுமை, அட்டகாசமான செயல்திறன் மற்றும் வலுவான கட்டுமான தரம் உள்ளிட்ட காரணங்களால், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஒன்றாக போலோ இருந்தது.

Volkswagen Polo

ஆனால் கடந்த 2022ம் ஆண்டு இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட வருடம் ஆனதால் விற்பனை குறைந்தது மற்றும் போட்டி அதிகரித்தது போன்றவற்றை இதற்கு காரணங்களாக கூறலாம். ஆனால் கார் ஆர்வலர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் போலோ, இன்னமும் புகழ்பெற்ற ஒன்றாகவே இருக்கிறது.

எனவே ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்ற கேள்வியை சமூக வலை தளங்களில் பலரும் கேட்பதை நாம் அடிக்கடி பார்க்க முடியும். இந்த கேள்வியை எழுப்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி.

Volkswagen Polo Rear Profile

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு (Volkswagen Annual Brand Conference 2024) சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆஷிஷ் குப்தா (Ashish Gupta) கலந்து கொண்டு பேசினார். ஃபோக்ஸ்வேகன் போலோ இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியம் குறித்தும் அவர் உரையாற்றினார்.

அவரது பேச்சில் இருந்து, ஃபோக்ஸ்வேகன் போலோ இந்திய சந்தையில் ரீ-லான்ச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் தற்போதைக்கு இல்லை என்பது நமக்கு தெரியவந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வேண்டுமானால் இது நடக்கலாம் என அவர் கூறியுள்ளார். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், கூடிய விரைவில் எல்லாம் ஃபோக்ஸ்வேகன் போலோ மீண்டும் விற்பனைக்கு வராது.

எதிர்காலத்தில் வேண்டுமானால் ரீ-லான்ச் செய்யப்படலாம். ஆனால் ஃபோக்ஸ்வேகன் போலோ மீண்டும் களமிறக்கப்படுவதாக இருந்தால், எஸ்யூவி அல்லது எலெக்ட்ரிக் வடிவத்தில்தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. எது எப்படியோ, ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்தால், அதன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது இந்தியா 2.0 (India 2.0) யுக்தியை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த கார்களை போல், ஃபோக்ஸ்வேகன் போலோ காரும் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் இது உடனடியாக நடக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 13:24 [IST]
English summary
Volkswagen polo india relaunch confirmed check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+