ஒரு லட்ச ரூபா குறைக்குறதுலாம் பெரிய விஷயம்... ஆனாலும் குறைச்சிருக்காங்க! யாரு சாமி அது?
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அதன் புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றின் விலையில் ரூ. 1 லட்சம் வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டைகுன் (Taigun) கார் மாடலின் விலையையே அது குறைத்திருக்கின்றது. நிறுவனம் இந்த கார் மாடலில் புதிய வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை அது எடுத்திருக்கின்றது. ஜிடி எனும் வேரியண்ட்டையே டைகுன் கார் மாடலில் ஃபோக்ஸ்வேகன் இணைக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகையை முன்னிட்டே ரூ. 70 ஆயிரம் தொடங்கி ரூ. 1.1 லட்சம் வரையில் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த விலை குறைப்பால் முன்னதாக ரூ. 11.70 லட்சமாக இருந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆரம்ப விலை தற்போது ரூ. 11 லட்சமாக குறைந்திருக்கின்றது. கம்ஃபோர்ட்லைன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனே டைகுன் கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு அடுத்தபடியாக டைகுன் ஜிடி பிளஸ் டிசிடி இருக்கின்றது. இதன் விலை முன்னதாக ரூ. 19.44 லட்சமாக இருந்து வந்தது. இதில் ரூ. 75 ஆயிரம் தற்போது குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதன் விலை ரூ. 18.69 லட்சமாக தற்போது குறைந்திருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, ஜிடி பிளஸ் குரோம் டிசிடியின் விலையில் ரூ. 1.05 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், 19.74 லட்சமாக இருந்த இந்த தேர்வின் விலை தற்போது ரூ. 18.69 லட்சமாக குறைந்திருக்கின்றது. இதேபோல், ஜிடி பிளஸ் எட்ஜ் டிசிடி மற்றும் ஜிடி பிளஸ் எட்ஜ் டிசிடி ஆட்டோமேட்டிக் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
ரூ. 80 ஆயிரம்- ரூ. 1.1 லட்சம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த இரண்டும் ரூ. 18.90 லட்சத்திற்கே கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஜிடி பிளஸ் வேரியண்டே அதிக சிறப்பம்சங்கள் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.
அதில், 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 8 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, ஆட்டோமேட்டிக் ஏசி, சிங்கிள் பேன் சன்ரூஃப் போன்ற பிரீமியம் தர அம்சங்களும் டைகுனில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம், சப்-ஊஃபர் மற்றும் ஆம்பிளிஃபையர் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரியர் வியூ கேமிரா ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும்.
இதில் 1.0 டர்போ பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேளையில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரோ அதிகபட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கியர்பாக்ஸை பொருத்த வரை 6 ஸ்பீடு எம்டி, 6 ஸ்பீடு ஏடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு விலை குறைப்பைச் செய்வது வழக்கமே. அந்தவகையிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாபெரும் விலை குறைப்பை அதன் டைகுன் கார் மாடலுக்கு அறிவித்து இருக்கின்றது. இதேபோல், சில எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியாளர்கள்கூட விலை குறைப்பை இந்த மாதத்தில் அறிவித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








