ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), இந்தியா மட்டுமின்றி, உலகளவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்கோடா ஆட்டோ உடன் இணைந்து செயல்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கூட்டணியில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் பல நாடுகளில் கார்கள் விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால், நம் இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரையில், சற்று பின்தங்கியே உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இலட்சக் கணக்கில் கார்களை விற்பனை செய்யும் நிலையில், ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் சராசரியாக தலா 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்கின்றன.

volkswagen skoda cars sales report

ஆனால், ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணியில் இருந்து மொத்தமாகவே கடந்த மாதத்தில் வெறும் 6,331 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 8,332 கார்கள் இந்த கூட்டணியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் & ஸ்கோடா கார்கள் விற்பனை 2 ஆயிரம் யூனிட்கள் குறைந்துள்ளது.

ஆனால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் வெறும் 5,273 கார்கள் மட்டுமே இந்த கூட்டணியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்த்தால், கடந்த மார்ச் மாதத்தில் 1,058 கார்களை ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணி அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த கூட்டணியில் இருந்து தற்சமயம் 7 கார்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

volkswagen skoda cars sales report

இதில் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விர்டுஸ், டைகுன், டிகுவான் என 3 கார்களும், ஸ்கோடா பிராண்டில் இருந்து ஸ்லாவியா, குஷாக், கோடியாக் மற்றும் சூப்பர்ப் என 4 கார்களும் அடங்குகின்றன. இதில் கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1,847 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 மார்ச்சில் இதனை காட்டிலும் 55 யூனிட்கள் குறைவாக 1,792 விர்டுஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 2வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளது. மொத்தம் 1,588 டைகுன் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச்சில் இதனை காட்டிலும் 388 கார்கள் அதிகமாக 1,976 டைகுன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

volkswagen skoda cars sales report

இதனை தொடர்ந்து, 3வது இடத்தில் ஸ்கோடா ஸ்லாவியா உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார் ஸ்லாவியா ஆகும். 1,358 ஸ்லாவியா கார்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 மார்ச் மாதத்தில் 1,574 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

4வது இடத்தை ஸ்கோடா குஷாக் பிடித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஓரளவிற்கு சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்கோடா காரின் விற்பனை சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 1,293 குஷாக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட ஆயிரம் குஷாக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

volkswagen skoda cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், உலகின் பல்வேறு நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள போதிலும் இந்தியாவில் மிகவும் பின்தங்கியே உள்ளது. ஆனால், இந்த கூட்டணி நிறுவனங்கள் இதற்கு பெரியதாக கவலைப்படாது. ஏனெனில், விற்பனை சிறப்பாக இருக்கும் மற்ற நாடுகளில் கூட 6,331 கார்களை ஒரு மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணி நிறுவனம் விற்பனை செய்யுமா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 9:58 [IST]
English summary
Volkswagen skoda cars sales report 2024 march check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X