இதுவரை இந்த காரை ஒரு லட்சம் பேர் வாங்கிட்டாங்களா! வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் சேல்ஸ் சூப்பர்!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 1 லட்சம் யூனிட்டுகள் வரை அது விற்பனையாகி இருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் டைகுன் (Taigun)-ம் ஒன்றாகும். இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி (Midsize SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த காரை உற்பத்தி பணிகள் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கார் உலக நாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையிலேயே இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த டைகுன் எஸ்யூவி கார் மாடலுக்கு இந்தியாவிலும், ஏற்றுமதி செய்யப்படும் உலக நாடுகளிலும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

2024 ஆகஸ்டு மாத முடிவின்படி டைகுன் கார் மாடல் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 67,140 யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், உலக நாடுகளுக்கு 32,742 யூனிட்டுகள் வரை டைகுன் கார் மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது, மூன்று ஆண்டுகளில் இந்த பிரீமியம் கார் ஒட்டுமொத்தமாக 99 ஆயிரத்து 882 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இது சியாம் (SIAM) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். விரைவிலேயே இந்த கார் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ரூ. 11.70 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் மட்டுமல்ல. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற வாகனமும் ஆகும்.

மிகப் பெரிய விபத்துகளில் இருந்தும் இந்த கார் பயணிகளைப் பாதுகாக்கும் என்பதற்கான சான்றே இதுவாகும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி (ESC), மல்டி கொலிசன் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பிரேக் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் வியூ கேமிரா ஆகிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
இதேபோல், நவீன மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களையும் மிக தாரளமாக இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 10.1 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில் 8 அங்குல டிஜிட்டல் திரை (டிரைவருக்கானது), சிங்கிள் பேன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஏசி, மை ஃபோக்ஸ்வேகன் கார் கன்னெக்ட் அம்சம், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கும்.
மேலும், கூல்டு குளோவ் பாக்ஸ், வயர்லெஸ் சார்ஜர், ஆர்ம் ரெஸ்ட், மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம், சப்-ஊஃபர் மற்றும் ஆம்பிளிஃபையர் ஆகியவையும் டைகுன் காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன் மற்றும் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும்.
இதுபோன்று பலதரப்பட்ட சிறப்புகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பிரீமியம் கார் விரும்பிகளின் மனம் கவர்ந்த கார் மாடலாக அது மாறியிருக்கின்றது. மேலும், விற்பனையிலும் அது கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போது அதன் ஒரு லட்சம் யூனிட் விற்பனை பற்றிய விபரம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரீமியம் தர கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டைகுன் உள்ளது. இதுமட்டுமல்ல விர்சுஸ் மற்றும் டிகுவான் ஆகிய கார் மாடல்களுக்கும் கணிசமான அளவில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








