கம்மி ரேட்ல புது காரை களம் இறக்கும் ஃபோக்ஸ்வேகன்! மாருதி, டாடா எல்லாம் இருக்குற இடம் தெரியாம போக போகுது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது தனது புதிய நான்கு மீட்டருக்கும் குறைவான உள்ள எஸ்யூவி காரின் பெயரை வெளியிட்டுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் காரை அடிப்படையாகக் கொண்டு தனது பிராண்டில் ஒரு புதிய காரை அறிமுகப்படுத்தும் என கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த காரின் பெயரை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் அந்த காருக்கு டெரா என பெயர் வைத்துள்ளது. அந்நிறுவனம் இந்த டெரா காரை வரும் 2025ம் ஆண்டு பிரேஸிலில் முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Volkswagen Tera

அதன் பிறகு பின்னர் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் செக்மெண்டில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் இந்த கார் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பலர் இந்த காரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

வழக்கமாக இந்த காரை தனது ஸ்டைலான லுக்கிலும் காம்பேக்டான வடிவமைப்பிலும் கொண்டு வந்துள்ளது. இதில் மாடலான வடிவமைப்புகள் மற்றும் பிரிமியமான அம்சங்கள் இடம் பெற உள்ளன. ஒட்டுமொத்தத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தரத்தை தொடர்ந்து பறைசாற்றும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் காரின் அடிப்படையில் தான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

Volkswagen Tera

இதனால் இந்த காரின் பிளாட்பார்ம், இன்ஜின் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் எல்லாம் ஸ்கோடா கைலாக் காரில் உள்ள அதே விஷயம் தான் இருக்கிறது. வடிவமைப்பில் மட்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கான தனிப்பட்ட வடிவமைப்பு இதில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முக்கியமாக புதிய கிரில், லைட்டிங் அமைப்புகள், பம்பர்கள் மற்றும் பின்பக்க கேட் வடிவமைப்பு எல்லாம் மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களை பகிர்ந்து கொள்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் குஷாக் மற்றும் டைகுன் ஆகிய காரும், ஸ்லாவியா மற்றும் விஷ்ணு ஆகிய காரும் இப்படியான கார் பகிர்வு மூலம் உருவாக்கப்பட்ட கார்கள் தான் தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டெரா காரை சோதனை செய்து வருகிறது.

அதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்கோடா கைலாக் காரில் உள்ள அதே இன்ஜின் தான். இந்த இன்ஜின் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிட்டி பயன்பாட்டிற்கும் அதே நேரம் ஹைவே பயன்பாட்டிற்கும் இந்த இன்ஜின் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரே இன்ஜின் தான் இந்த காரில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இந்த காரில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் உள்ளன. முக்கியமாக அட்வான்ஸ்டான கனெக்டிவிட்டி ஆப்சன்கள், பாதுகாப்பு அம்சங்கள், அதிக இட வசதியுடன் கூடிய உட்புற கட்டமைப்பு, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தனித்துவமான தரம் மற்றும் பயணிகள் அனுபவம் ஆகியவை இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனம் 2028ம் ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்க ஒரு பக்கம் திட்டமிட்டு கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அதற்கு முன்னர் முடிந்த அளவுக்கு கம்பஷன் இன்ஜின் வாகனங்களில் அதிக அளவிலான வாகனங்களை அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்தி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர் எலெக்ட்ரிக் மார்க்கெட்டை டார்கெட் செய்தால் நல்ல விற்பனை பெறும் என திட்டமிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளுமே இருக்கிறது. இந்த வட்டாரத்திற்கு விருந்தளிக்கும் வகையில் இந்த கார் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டெரா என்ற பெயரும் இந்திய மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் என்ற பேச்சு நிலவி வருகிறது. நிச்சயம் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 12:26 [IST]
English summary
Volkswagen tera sub 4m suv name revealed skoda kylaq based
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+