இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்து வெளியிடும் காரை கடந்த மார்ச் மாதம் வெறும் 94 வாடிக்கையாளர்கள் தான் வாங்கியுள்ளார்கள். இதன் மூலம் இந்த காரின் விற்பனை 28.79% வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வளவு பெரிய வீழ்ச்சி ஏன் அடைந்துள்ளது? இந்த காரை மக்கள் விரும்பாததற்கு காரணம் என்ன? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த செக்மெண்டில் எந்த கார்கள் வந்தாலும் சிறப்பான விற்பனையை பெற்று வருகின்றன. அந்த கார்களுக்கு ஏற்ற அம்சத்தின் படி வாடிக்கையாளர்களை கவர்கிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வெளியிட்டு வருகின்றன. இதில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்த மார்ச் மாதம் மட்டும் 15,151 கார்கள் விற்பனையாகி எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. ஆனால் மறுபுறம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் கார் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த எஸ்யூவி கார்களில் டாப் 9வது இடத்தை பிடித்திருந்தாலும், கடந்த மார்ச் மாதம் இந்த காரின் விற்பனையை பார்க்கும் போது வெறும் 94 பேர் தான் இந்த காரை வாங்கி உள்ளார்கள். இது கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையை ஒப்பிடும்போது 28.79 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த காரை 132 பேர் வாங்கி இருந்தார்கள். தற்போது அதைவிட குறைவான எண்ணிக்கையிலேயே வாகனம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த வாகனத்தின் விற்பனை என்பது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 275 கார்கள் விற்பனையா நிலையில் தற்போது அது மெல்ல மெல்ல குறைந்து மார்ச் மாதம் 94 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
இந்த காரின் இன்ஜினியரிங் பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 13.54 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் காராக உருவாக்கப்பட்டுள்ளது.

7 சீட்டர் கொண்ட காராக இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் மார்க்கெட்டில் ஒரே ஒரு வேரியன்டில் மட்டும்தான் இந்த கார் விற்பனை ஆகிறது. இதில் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களும் இருக்கின்றன. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக 8 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இது போக கூடுதலாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பேனரோபிக் சன் ரூஃப், மூன்று ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் ,30 கலர் கொண்ட ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் உட்புறம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை மொத்தம் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 35.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை தான் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக விலையில் இந்த கார் விற்பனையாகி வருவதால் பலர் இதை வாங்க தயங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறதே இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமான தயாரிப்புகளாக இருக்கும் என மக்கள் கருதுவதால் ஏகப்பட்ட மக்கள் இந்த நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இருந்தாலும் இந்த காரின் விலை அதிகமாக இருப்பது மட்டுமே இந்த காரின் விற்பனை சரிவிற்கு காரணமாக இருக்கலாம். இந்த காரின் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்தால் நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









