50,000 கஸ்டமர்களின் நம்பிக்கையான கார்!! மேட்-இன்-இந்தியா கார் என சொன்னால் நம்ப முடிகிறதா?
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்திற்கு இந்திய சந்தை எப்போதுமே ஏற்றம், இறக்கமுமாய் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சமீப காலமாக நம்பிக்கைக்குரிய காராக விர்டுஸ் (Virtus) விளங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், விர்டுஸ் கார்கள் விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. குறுகிய காலத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்த சாதனையை செய்து இருப்பது ஆச்சிரியமானதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும், ஃபோக்ஸ்வேகனும் கூட்டணியில் உள்ளன. இந்த இரு நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான ஃபார்முலாவில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக, கார்கள் உற்பத்தியில் கணிசமாக செலவு குறைவதுடன், இரு நிறுவனங்களும் இலாபத்தை சம்பாதிக்கின்றன. இந்த யுக்தியை கடந்த சில வருடங்களாக இவை இரண்டும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

இந்த முயற்சியில் உருவாக்கப்பட்டதே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஆகும். ஃபோக்ஸ்வேகனின் செடான் ரக காராக விர்டுஸ் விளங்குகிறது. இதேபோன்றதான தோற்றத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அதற்கான ஸ்லாவியா காரை கொண்டுள்ளது. ஸ்கோடாவில் ஸ்லாவியாவுக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஃபோக்ஸ்வேகனில் விர்டுஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ஃபோக்ஸ்வேகன் காராக விர்டுஸ் விளங்குகிறது. விர்டுஸ் மூலமாகவே, ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் ஸ்கோடாவை ஃபோக்ஸ்வேகன் கடந்த சில மாதங்களாக முந்தி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை குறுகிய காலத்தில் 50,000 என்கிற இமாலய எண்ணிக்கையை கடந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் விர்டுஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 28 மாதங்கள். அதாவது, 28 மாதங்களில் 50,000க்கும் அதிகமான விர்டுஸ் செடான் கார்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 1786 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான செடான் கார்கள் பிரிவில் விர்டுஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ப்ரீமியம் செடான் கார் பிரிவில் இருந்து இந்த 2024ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் என கூறப்படுகிறது. 2024 ஜனவரி- செப்டம்பர் என கடந்த 9 மாதங்களில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமான விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விர்டுஸ் காரின் அடையாளமே அதன் அதிகப்படியான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகள் ஆகும்.

இதன் மூலமாக, பாதுகாப்பில் உயர் தரத்திலான ஸ்டாண்டர்டை விர்டுஸ் நிர்ணயித்துள்ளது. இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் விர்டுஸ் காரில் ஜிடி லைன் மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் என 2 புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை முற்றிலுமாக கருப்பு நிற பெயிண்ட்டில் உருவாக்கப்பட்டு உள்ளன.
விர்டுஸ் காரை போலவே ஃபோக்ஸ்வேகனின் மற்றொரு பிரபலமான காராக டைகுன் எஸ்யூவி கார் விளங்குகிறது. இவை இரண்டையும் மொத்தமாக 1 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்துள்ளதாக கடந்த மே மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது, விர்டுஸின் விற்பனை எண்ணிக்கையில் மட்டும் 50,000 மைல்கல்லை ஃபோக்ஸ்வேகன் கடந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கார்கள் விற்பனையில் 6 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்ததாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்தது. இதில் 18.5% கார்கள் விற்பனை ஆனது கடந்த 3 வருடங்களில் கிடைத்தது ஆகும். இதில், விர்டுஸின் பங்களிப்பு முக்கியமானதாக விளங்குகிறது. இதில் இருந்து, இந்த ஃபோக்ஸ்வேகன் செடான் காருக்கு மக்கள் எந்த அளவிற்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









