ஃபோக்ஸ்வேகன் கார் என்றாலே தனி கெத்து தான்... தீபாவளிக்கு வாங்க சரியான கார் வந்தாச்சு!!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அதன் பிரபலமான விர்டுஸ் (Virtus) காரில் புதியதாக ஜிடி (GT) வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் கார்களில் புதியதாக ஹைலைன் பிளஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டைகுன் ஜிடி லைன் காருக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. விரைவில் வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அறிமுகங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஃபோக்ஸ்வேகனும் ஒன்றாகும். கடந்த காலங்களில் இருந்து பல்வேறு கார்களை விற்பனை செய்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக விர்டுஸ் விளங்குகிறது. இதன் காரணமாக, பண்டிகை காலத்திற்காக முக்கியமாக விர்டுஸ் காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

volkswagen virtus gt variants launched

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் ஜிடி லைன் மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் என 2 வேரியண்ட்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், விர்டுஸ் ஜிடி லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.07 லட்சமாகவும், ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.17.84 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விர்டுஸ் காருடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ஜிடி வேரியண்ட்களின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றங்கள் சில அப்டேட்களை பெற்றுள்ளன.

இதன்படி காருக்கு முன்பக்கத்தில் ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரில் பகுதியில் ஜிடி பேட்ஜ் புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளது. காரின் மேற்கூரை கார்பன் ஸ்டீல் கிரே நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகள் டார்க் க்ரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப காரின் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

volkswagen virtus gt variants launched

ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டில் மட்டும் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். விர்டுஸ் காரின் இந்த ஜிடி வேரியண்ட் கார்களுக்கு உள்ளே கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்கள் உடன் உள்ளது. டேஸ்போர்டின் கருப்பு நிறம் மட்டும் கொஞ்சம் அதிகமாக பளபளக்கக்கூடியதாக உள்ளது. ஜிடி கார் என்பதை குறிக்கும் வகையில், ஜிடி முத்திரைகள் காருக்கு உள்ளேயும் இருக்கை தலையணைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸலரேட்டர், பிரேக், க்ளட்ச் உள்ளிட்டவற்றிற்கான பெடல்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டதாக உள்ளன. ஸ்டேரிங் சக்கரத்தில் சிவப்பு நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது. காருக்கு உள்ளே மேற்கூரையில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சன் விஸர்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. விர்டுஸ் ஜிடி லைன் காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினையும், ஜிடி பிளஸ் ஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினையும் பெறலாம்.

இவை இரண்டுடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் என 2 விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறலாம். ஏற்கனவே கூறியதுபோல், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் கார்களில் ஹைலைன் பிளஸ் என்கிற வேரியண்ட்டும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் 20.32 செ.மீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம்.

volkswagen virtus gt variants launched

மேலும், ஆட்டோமேட்டிக்காக செயல்படும் ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் போன்றவற்றையும் பெறலாம். 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் விர்டுஸ் ஹைலைன் பிளஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.26 லட்சமாகவும், டைகுன் ஹைலைன் பிளஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.87 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, டைகுன் ஜிடி லைன் காருக்கும் சில வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்கிற ஒன்றிற்காக மட்டுமே. இதன் மூலமாக, இந்த தீபாவளிக்கு ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 19:34 [IST]
English summary
Volkswagen virtus gt line and gt plus launched price features all details here
மேலும்... #volkswagen #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X