ஃபோக்ஸ்வேகனில் கார் வாங்குபவர்களின் முதல் சாய்ஸ் இதுதான்!! விலையை பார்த்தால்தான் பயமா இருக்கு!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் விர்டுஸ் (Virtus) செடான் காரில் புதியதாக ஜிடி லைன் வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. விர்டுஸ் காரில் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். புதிய விர்டுஸ் ஜிடி லைன் காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி லைன் வேரியண்ட்டில் என்ன மாதிரியான வசதிகள் வழங்கப்படுகின்றன மற்றும் இந்த கார் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செயல்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து எம்.க்யூ.பி ஏ0 இந்தியா என்கிற பிளாட்ஃபாரத்தை உருவாக்கி உள்ளன. இந்தியாவிற்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டவை தான் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் ஆகும்.

volkswagen virtus gt line spotted

இதில், விர்டுஸில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதியதாக ஜிடி லைன் வேரியண்ட்டை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. சிறிய அளவிலான 1.0 லிட்டர் என்ஜின் உடன் விர்டுஸ் காரில் ஜிடி பேட்ஜ்ஜை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்வது இதுவே முதல்முறை ஆகும். விர்டுஸ் ஜிடி லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.07 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், விர்டுஸ் காரில் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் என்கிற வேரியண்ட்டும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் அளவில் பெரியதான 1.5 லிட்டர் எவோ என்ஜின் கிடைக்கும். விர்டுஸ் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.84 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி லைன் வேரியண்ட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்.

volkswagen virtus gt line spotted

ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டை காட்டிலும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், விர்டுஸ் ஜிடி லைன் மற்ற விலை குறைவான வேரியண்ட்களில் இருந்து தனித்து தெரியும் வகையில் ஏகப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்கள், முன்பக்க க்ரில், அவுட்சைடு ரியர் வியூ மிரர்கள், காருக்கு முன் & பின்பக்கத்தில் கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

காருக்கு வெளியே ஜிடி லைன் முத்திரைகளை கதவுகள் மற்றும் பூட்லிட் பகுதிகளில் பார்க்க முடிகிறது. 'விர்டுஸ்' என்கிற எழுத்துகள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஸ்பாய்லர், விண்டோ லைன் பார் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே, முழுவதும் கருப்பு நிறத்திலான கேபின் விர்டுஸ் ஜிடி லைன் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேட்ச்சிங்காக சிவப்பு நிறத்திலான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

volkswagen virtus gt line spotted

பிரேக், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச் உள்ளிட்டவற்றிற்கு அலுமினியத்திலான பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, 8-இன்ச் டிஜிட்டல் காக்பிட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ்-ஸ்டார்ட் பொத்தான் உடன் கீலெஸ் எண்ட்ரீ, ஆட்டோ-டிம்மிங் IRVM, மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் மற்றும் ஆட்டோ ஹெட்லைட்கள் உள்ளிட்டவைவும் விர்டுஸ் ஜிடி லைன் காரில் வழங்கப்படுகின்றன.

இந்த காரில் பொருத்தப்படும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 178 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகனில் இருந்து தற்போதைக்கு அதிகம் விற்பனையாகும் காராக விர்டுஸ் விளங்குகிறது. இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க இவ்வாறான புதிய வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியமாகுகின்றன. அத்துடன், இந்த காரில் பொருத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ என்ஜின் அளவில் சிறியதாக இருப்பினும், ஆற்றல்மிக்கது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 11:58 [IST]
English summary
Volkswagen virtus gt line spotted in showroom yard check all details here
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X