எதுத்தாப்ல எமனே வந்து நின்னாலும் இந்த கார் உங்களை காப்பாத்தும்... ஆனா யாருமே வாங்க மாட்றாங்க... ஏன் தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார், 9 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 1,812 விர்டுஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 1,656 ஆக குறைந்துள்ளது.

இது 9 சதவீத வீழ்ச்சியாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை 11.56 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.41 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரும் விலை (Ex-showroom Price) ஆகும்.

Volkswagen Virtus GT Plus Sport

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் ஆக உள்ளது.

மறுபக்கம் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் ஆக இருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

Volkswagen Virtus GT Plus Sport Rear Design

வசதிகளை பொறுத்தவரையில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 8 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்றவை எல்லாம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இது குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே இந்தியாவில் கிடைக்க கூடிய பாதுகாப்பான செடான் கார்களில் ஒன்றாக இதை குறிப்பிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் செடான் ரக கார்கள் படிப்படியாக தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனையில் சரிவை சந்தித்திருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 23:20 [IST]
English summary
Volkswagen virtus sedan sales report june 2024
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+