இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம், 1,847 விர்டுஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 1,792 ஆக மட்டுமே இருந்தது. இது 3 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட செடான் ரக கார்களின் பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார், 5வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

Volkswagen Virtus

அவை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ ஆகியவை ஆகும். இதில், முதலாவது பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் ஆகும். அதே நேரத்தில் 2வது இன்ஜினின் பவர் அவுட்புட் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் ஆகும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி என 3 விதமான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் கொடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, விர்டுஸ் காரிலும் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.

Volkswagen Virtus Rear Design

குறிப்பாக பாதுகாப்பில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் தலைசிறந்து விளங்குகிறது. இது குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) பெற்ற கார்களில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 பிரிவினருக்குமான பாதுகாப்பிலும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. எனவே இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான செடான் ரக கார்களில் ஒன்றாக உள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்றவை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பு வசதிகள் ஆகும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கி கொண்டிருப்பதற்கு இந்த பாதுகாப்பு வசதிகள் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை 11.56 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.41 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) போன்ற செடான் ரக கார்களுக்கு, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 23:59 [IST]
English summary
Volkswagen virtus sedan sales report march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+