நம்பவே முடியல.. என்னங்க இந்த காரெல்லாம் இப்படி பேயி மாதிரி விற்பனையாகிட்டு இருக்கு! சிட்டியையே ஓரங்கட்டிருச்சா

ஒட்டுமொத்த உலகமும் எஸ்யூவி (SUV) கார்களை லைக் செய்தாலும், நாங்கள் செடான் (Sedan) காரைதான் வாங்குவோம்னு நிறைய பேரு கடந்த அக்டோபர் மாதத்தில் செடான் ரக காரை அதிகம் வாங்கி இருக்கின்றனர். இந்தியர்கள் பெரும்பாலானோர் எஸ்யூவி கார் காதலர்களாக மாறிவிட்டனர். அதேவேளையில், செடான் பிரியர்களும் இந்த நாட்டில் இப்போதும் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாகவே இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. அதிலும், இந்த பிரிவில் குறிப்பிட்ட ஓர் செடான் ரக கார் மாடலுக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருப்பதாக தற்போது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகி உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் கார் மாடலே அதுவாகும். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்பனையான செடான் ரக கார் மாடலில் இதுவே நம்பர் ஒன் ஆகும். சுமார் 2,351 யூனிட்டுகளே இந்த கார் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. இது உங்களுக்கு குறைவான யூனிட்டாக தெரியலாம்.

Volkswagen virtus best selling sedan

ஆனால், இதைவிட குறைவான எண்ணிக்கையிலேயே இதன் போட்டி செடான் ரக கார் மாடல்கள் விற்பனையாகி இருக்கின்றன. குறிப்பாக இதன் சகோதர கார் மாடலான ஸ்லேவியாவையும் விற்பனையில் இந்த கார் மாடல் விற்பனையில் மிஞ்சியிருக்கின்றது. இந்தியாவில் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Ciaz), ஹோண்டா சிட்டி (Honda City) என பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இவற்றிற்கே மிக சிறந்த போட்டியாளனாக இந்த கார் மாடல் மாறியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காருக்கு நேற்று, இன்று அல்ல அது விற்பனைக்கு வந்த நாள் முதலில் இருந்தே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்திலேயே இந்த கார் மாடல் 50 ஆயிரம் யூனிட் விற்பனை எனும் மாபெரும் மைல் கல்லை எட்டியது.

இந்த காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 'எம்க்யூபி ஏ0 ஐஎன்' பிளாட்பாரத்தின் வாயிலாகவே தயார் செய்திருக்கின்றது. மேலும், இந்தியா 2.0 எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே இதுவாகும். மேலும், முதன் முதலில் இந்த காரை இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு களமிறக்கியது.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாக பல்வேறு காரணங்களைக் கூறலாம். மிக முக்கியமாக இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற செடான் ரக கார் மடால் ஆகும். சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது.

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இத்தகைய அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த கார் மாடல் பெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், மல்டி கொலிசன் பிரேக், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் ஆகிய அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, இன்னும் 40 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில், 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடு திரை வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் போக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு டிமாண்ட் இப்போதும் குறையாமல் இருக்கின்றது என்பதற்கு சான்றாகவே ஃபேக்ஸ்வேகன் விர்சுஸ் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பானது அமைந்திருக்கின்றது. விர்சுஸ் பாதுகாப்பு, பிரீமியம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் பெஸ்ட்டான கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 10, 2024, 22:59 [IST]
English summary
Volkswagen virtus sold 2 351 units best selling sedan in october 2024
மேலும்... #volkswagen #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+