இந்த காரை எல்லாம் யாரு வாங்குவான்னு நினைச்சா, இவ்வளவு பேர் கூட்டம் கூட்டமா போய் வாங்கியிருக்காங்களா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல அதிகமாகி கொண்டே இருக்கிறது. தற்போது டூவீலர் ஸ்கூட்டர் செக்மெண்டில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் மீது இருக்கும் ஒரே விமர்சனம் அதன் விலை அதிகமாக இருப்பது தான் பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பலர் இந்த ரக காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
சாதாரண குறைந்த விலை பெட்ரோல், டீசல் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் அதைவிட அதிகமான விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பல பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. அந்த வாகனங்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இப்படியாக தான் வால்வோ நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வால்வோ நிறுவனம் முதன் முதலில் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கியமான மைல் கல்லை இந்நிறுவனம் எட்டிப் பிடித்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார் மீதான மோகம் அதிகமாகி உள்ள நிலையில் இந்த சாதனையை நிறுவனம் படைத்துள்ளது.
வால்வோ நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள் தான் விற்பனை செய்யும் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. இதற்காக அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் ஒரு ஒரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது.

இந்நிறுவனம் முதல் முதலாக இந்தியாவில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற காரை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தியது. இந்த காரை அந்நிறுவனம் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து, இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி வால்வோ எக்ஸ்சி 40 ரீசார்ஜ், வால்வோ சி40 ரீசார்ஜ் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன.
வால்வோ எக்ஸ்சி 40 ரீசார்ஜ் காரை பொறுத்தவரை சிங்கிள் மோட்டார் வேரியன்ட் காராக விற்பனையாகி வருகிறது. இது 238 பிஎச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 592 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வால்வோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 28% எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இருப்பதாக நிரூபணம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு எலெக்ட்ரிக் கார் விற்பனையை ஒப்பிடும்போது இந்த ஆண்டு எலெக்ட்ரிக் காரின் விற்பனை என்பது 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி பிடிக்கும் வகையில் வால்வோ நிறுவனம் 1000 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டிப் பிடித்துள்ளது.
வால்வோ காரை பொருத்தவரை சர்வதேச அளவில் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. மொத்தம் 68,034 கார்கள் சர்வதேச அளவில் விற்பனையாகியுள்ளன. இதில் ஐரோப்பிய மார்க்கெட்டில் மட்டும் இஎக்ஸ் 30 என்ற எலெக்ட்ரிக் காருக்கு நல்ல மவுசு ஏற்பட்டது. இதனால் அங்கு மட்டும் 27% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த நிறுவனங்களின் கார்களின் விற்பனை ஐந்து மற்றும் ஒரு சதவீதம் வரை குறைந்துள்ளது.
இந்தியாவில் வால்வோ கார்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமான தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சற்று விளைவு உயர்ந்ததாக இருக்கும் எனவும் கருதுகிறார்கள். இதன் காரணமாக பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ நிறுவனம் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் தீவிர முயற்சி செய்து வருகிறது. வருங்காலத்தில் இந்நிறுவனம் முழுவதுமாக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதால் தற்போது முதலில் அதற்கான முயற்சியில் இறங்கி அதில் பெரும் வெற்றியையும் பெற்று வருகிறது என்று சொல்லலாம். இந்தியாவில் இந்நிறுவனம் ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. நிச்சயம் மிகப்பெரிய மைல்கல் தான்.


Click it and Unblock the Notifications








