சிஎன்ஜி கார் விற்பனையில இந்த காருதான் டாப்புல இருக்கு.. என்னது ஒரு கிலோவிற்கே 33.47 கிமீ மைலேஜ் தருதா!!
இந்தியாவில் சிஎன்ஜி (CNG)-யில் இயங்கும் வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் சிஎன்ஜி வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர். நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் கவனத்தை சிஎன்ஜி-யின் பக்கம் திருப்பி இருக்கின்றனர். அந்தவகையில், உலகின் முதல் சிஎன்ஜி-யில் இயங்கும் டூ-வீலரை பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) எனும் பெயரிலேயே அப்பைக் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், விரைவில் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரும் விற்பனைக்கு வர இருக்கின்றது. டிவிஎஸ் (TVS) நிறுவனமே இந்த வரலாற்று சிறப்புமிக்கை நிகழ்வை அரங்கேற்றம் செய்ய இருக்கின்றது. அது, அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடலான ஜுபிடரை அடிப்படையாகக் கொண்டே சிஎன்ஜி ஸ்கூட்டரை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறே வாகன உற்பத்தியாளர்களை சிஎன்ஜி வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கச் செய்கின்ற அளவிற்கு நாட்டில் அவற்றிற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் சிஎன்ஜி உள்ளது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக தன்னுடைய 14 கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு உள்ளது.
ஆனால், வேகன்ஆர் சிஎன்ஜிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மிகவும் அபரீதமானதாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிஎன்ஜி கார்கள் விற்பனையில் 46 சதவீத பங்கை வேகன்ஆர் கார் மாடலே கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் பிரெஸ்ஸா எஸ்யூவி கார் மாடல் இருக்கின்றது.
இரண்டாவது இடத்தை இதுவே பிடித்திருக்கின்றது. 26 சதவீத பங்கைையே பிரெஸ்ஸா எஸ்யூவி கொண்டு இருக்கின்றது. பாக்கியுள்ள 28 சதவீத பங்கையே நிறுவனத்தின் மற்ற சிஎன்ஜி கார் மாடல்கள் கொண்டிருக்கின்றன. அதாவது, 12 கார் மாடல்கள் சேர்ந்தே இந்த மீத 28 இடத்தைப் பிடித்திருக்கின்றன.
மாருதி சுஸுகி வேகன்ஆர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு வெர்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த 14 சிஎன்ஜி கார் மாடல்களில் மிகவும் முக்கியமானதாகவும் இதுவே காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விற்பனை புள்ளி விபரங்கள் அமைந்திருக்கின்றன.
மேலும், வேகன்ஆர் சிஎன்ஜி இந்தியாவில் ரூ. 6.44 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும் இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 33.47 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனத்தால் கூறப்படுகின்றது.
நிஜ வாழ்க்கையில் 28 கிமீ முதல் 30 கிமீ வரை நிச்சயம் மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த அதீத மைலேஜ் திறனும், குறைவான விலையுமே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக உள்ளது. வேகன்ஆர்-இன் எல்எக்ஸ்ஐ (LXI) மற்றும் விஎக்ஸ்ஐ (VXI) ஆகிய இரண்டு வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் போட்டி போட்டுக் கொண்டு சிஎன்ஜி வாகன மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் எக்ஸ்டர் சிஎன்ஜி கார் மாடலில் இரட்டை சிலிண்டர் தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியர்களின் கவனத்தை தன் வசம் ஈர்க்கும் பொருட்டை இதை ஹூண்டாய் செய்தது.


Click it and Unblock the Notifications








