பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!
மத்திய அரசு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய நிபந்தனை அடிப்படையிலான இறக்குமதி வரி விலக்கை சமீபத்தில் அறிவித்துள்ளது. இது டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் தனது வாகனங்களை விற்பனை செய்ய மிகப்பெரிய வழியை ஏற்படுத்தியுள்ளது. இனி டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனை ஆகும் போது என்ன விலையில் விற்பனையாகும் என்ற விபரத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக கருதப்படுவது டெஸ்லா நிறுவனம் தான். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இதுவரை காலடி தடத்தை எடுத்து வைக்கவில்லை.

வெளிநாடுகளில் டெஸ்லா கார்களை வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்து மட்டுமே இந்தியாவில் டெஸ்லா கார்களை பயன்படுத்த முடியும். இதற்கு விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் பலர் இதை செய்ய தயங்குவார்கள். இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் என்பது பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்தியாவில் தற்போது டெஸ்லா காரை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ரூ70 லட்சம் செலவு செய்ய வேண்டும்.
மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்தால் குறைவான விலையில் விற்பனை செய்யலாம், நேரடியாக இறக்குமதி செய்தால் அதிகமான வரி மட்டுமே வசூலிக்க முடியும் எனக்கூறி இருந்தது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மத்திய அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகன இறக்குமதி விதியில் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதன்படி சமீபத்தில் வெளியான எலெக்ட்ரிக் வாகன பாலிசி திருத்த சட்டத்தின் படி வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் குறைவான வரியில் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றால், அந்த வாகனத்தை தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்து இந்தியாவில் தனது தயாரிப்பு ஆலையை துவங்க வேண்டும் என அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
இது மட்டுமல்லாமல் இப்படியாக ஒப்பந்தம் செய்தாலும் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்த பின்பு அடுத்த ஐந்து ஆண்டுக்குள் அந்த ஆலையில் தயாரிக்கப்படும் கார்களில் 50 சதவீதமான உதரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அல்லது வாங்கப்பட்ட பயன்படுத்த வேண்டும் என உறுதி அளிக்க வேண்டும். இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஆண்டிற்கு 8,000 கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தால் டெஸ்லா நிறுவனம் முதலில் தனது கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து, இந்திய மக்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு பின்னர் இந்தியாவில் ஆலைய அமைத்து தனது தயாரிப்பை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள சட்டத்தின் படி 35 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான கார்களை மட்டுமே இந்த குறைவான வரியில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதி இருக்கிறது.
இந்த வழியில் டெஸ்லா கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டால் காரின் விலையே சுமார் 29 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். இதற்கு கூடுதலாக தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரிவுடன் சேர்த்து இந்த காரின் விலை ரூபாய் 32 லட்சம் என்ற விலையில் இறக்குமதியாகும். அதன் பின்னர் இந்தியாவில் இந்த காரை போக்குவரத்து செய்வதற்கான செலவு பதிவு செய்வதற்கான செலவு என சில செலவுகள் இருக்கிறது.
இது அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால் மார்க்கெட்டுக்கு இந்த கார் விற்பனைக்கு வரும்போது, ரூபாய் 35 முதல் 37 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் ஒப்பந்த மேற்கொண்டு குறைந்த வரியில் எனது கார்களை இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இது வெளிநாட்டில் உள்ள பிரபலமான நிறுவனங்கள் இந்தியாவில் தனது தொழிலை துவங்குவதற்கு முன் ஒரு முன்னோட்டத்தை பார்ப்பதற்கு நிச்சயம் ஒரு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஆலை அமைப்பது உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications









