வெள்ளை நிறத்தில் ஷோரூமில் கெத்தாக காட்சியளிக்கும் புதிய ஸ்விஃப்ட்... ஒரு லிட்டருக்கே 25 கிமீ தருமா!
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
அடுத்த வாரம் வியாழக்கிழமையே (மே 9இல்) இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையிலேயே புதிய ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது புதிய ஸ்விஃப்ட் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய வெள்ளை நிற ஸ்விஃப்ட் ஷோரூமின் முன் பக்கத்தில் நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இருக்கின்றது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஒன்றாகவும் ஸ்விஃப்ட் காட்சியளிக்கின்றது.
ஆனால், சமீப காலமாக இதன் விற்பனை லேசாக டல்லடிக்க தொடங்கிவிட்டது. இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் பலருக்கு தெகட்டிவிட்டதாலும், அப்டேட்டுகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலுமே இந்த கார் விற்பனையில் தொய்வைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில், ஒரு சிலர் இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, சமீபத்தில் புதிய ஸ்விஃப்ட் காரின் வருகையை உறுதிப்படுத்தியது மாருதி சுஸுகி. தற்போது அறிமுக நாளையும் அது அறிவித்துவிட்டது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட்-டை விட விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஸ்விஃப்ட் அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது.
இதன் க்ரில், ஹெட்லைட், கதவின் கை பிடிகள், பம்பர் உள்ளிட்டவை மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல் காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் ஏசி துளை மற்றும் ஏசி கன்ட்ரோலுக்கு மத்தியில் இடம் பெற்றிருக்கும் திரை புதிய ஸ்விஃப்டில் மேலே இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

அத்துடன், இதன் டேஷ்போர்டு முழமையாக புதிய ஸ்டைலுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. எனவே புதிய ஸ்விஃப்டில் புதிய ஃபீல் மிக தாராளமாக கிடைக்கும் என கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதேபோல், இந்த காரில் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட்12இ பெட்ரோல் எஞ்சினே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.38 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கும். ஆனால், புதிய ஸ்விஃப்ட் அதிகபட்சமாக 25.72 கிமீ வரை மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது.

இது 3.3 கிலோ மீட்டர் வரை அதிக மைலேஜ் திறன் ஆகும். மேலும், புதிய எஞ்சின் 81.6 பிஎஸ் மற்றும் 112 என்எம் டார்க்கையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், 9 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆறு ஏர் பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் புதிய ஸ்விஃப்ட் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்விஃப்ட் காருக்கு தற்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே புதிய ஸ்விஃப்டை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இது அதிகம் மைலேஜை வழங்கும் என்பதாலும், அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









