மாருதி கிட்ட இல்லாதது அப்படி என்ன இந்த மஹிந்திரா காரில் இருக்கு? கஸ்டமர்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு குவியுறாங்க!!

என்ன தான் புது, புது மாடர்ன் கார்கள் விற்பனைக்கு வந்தாலும், ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுக்கு எப்போதுமே தனி கிரேஸ் உண்டு. மாருதி சுஸுகி ஜிப்ஸி தான் அந்த கிரேஸை ஆரம்பித்து வைத்தது என சொல்லலாம். அதன்பின், மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு பிரியர்களின் பிரதான சாய்ஸாக உள்ளது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக, மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியை கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொண்டுவந்தது. தார் வாகனத்தை போல் 3 கதவுகளுடன் இல்லாமல், 5 கதவுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிம்னி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக மஹிந்திரா தாருடன் ஒப்பிடுகையில், ஜிம்னி வாகனங்களின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சரிந்து வருகிறது.

why buyers go for thar

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் வெறும் 163 ஜிம்னி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாதத்தில் தாரின் விற்பனை எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து பதிவாகி உள்ளது. 3 கதவுகளை மட்டுமே கொண்டிருப்பினும், மாருதி சுஸுகி ஜிம்னியுடன் ஒப்பிடுகையில், யார் யாருக்கு மஹிந்திரா தார் வாகனம் ஏற்றதாக இருக்கும்? வாருங்கள் அதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

• இன்றைய கால உலகில் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்கள் பல்வேறு விதமான ஸ்டைல்களில் வந்துவிட்டன. இருப்பினும் சிலருக்கு, ஜிப்ஸி போன்றதான பழைய கிளாசிக் தோற்றத்தில் இத்தகைய வாகனத்தை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இவ்வாறான ஆசை கொண்டவர்களின் சாய்ஸ் ஆட்டோமேட்டிக்காக தாரின் பக்கம் போகிறது. ஏனெனில், ஜிம்னி உடன் ஒப்பிடுகையில் மஹிந்திரா தார் இன்னமும் கிளாசிக் தோற்றத்தில் விற்பனையில் உள்ளது.

why buyers go for thar

• தன்னை மட்டுமின்றி, சாலையில் செல்லும்போது மற்றவர்களையும் உடனடியாக கவரக்கூடியதாக தனது வாகனம் இருக்க வேண்டும் என நம் அனைவருக்கும் விருப்பம் இருக்கும். ஜிம்னியை விட தார் நன்கு ரக்டான தோற்றத்தை கொண்டுள்ளது. இதனால், எவரொருவரையும் எளிதாக வசீகரிக்கக்கூடிய தன்மை தாரின் தோற்றத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, 3-கதவு மஹிந்திரா தாரை விட 5-கதவு ஜிம்னி அளவில் சிறியதாக உள்ளது.

• ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பயமில்லாமல் கொண்டு செல்ல வேண்டுமென்றால், வாகனத்தின் திறன் கட்டாயம் சிறப்பானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜிம்னியை காட்டிலும் தாரின் கை ஓங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் என எந்த வகையான என்ஜினுடனும் மஹிந்திரா தாரில் 0-இல் இருந்து 100kmph வெறும் 10 வினாடிகளுக்குள் எட்டிவிட முடிகிறது. அதுவுமில்லாமல், ஜிம்னியை பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடிகிறது.

why buyers go for thar

• ஆஃப்-ரோடு பயணங்கள் சில நேரங்களில் ஆபத்தானவையாக இருந்தாலும், பல நேரங்களில் அவை அழகானவையாக இருக்கும். அந்த அழகிய பயணத்தை 360 டிகிரியில் காணவே எல்லாரும் விரும்புவர். இந்த வாய்ப்பை மஹிந்திரா தார் மட்டுமே வழங்குகிறது. ஏனெனில், தாரில் மட்டுமே சாஃப்ட்-டாப் என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த ஆப்ஷனில் வாகனத்தின் மேற்கூரையை நீக்கிக் கொள்ளலாம்.

• இவ்வாறு, பெட்ரோல் & டீசல் என்ஜின், சாஃப்-டாப் & ஹார்ட்-டாப் உள்பட ஏகப்பட்ட வேரியண்ட் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் கிடைக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தார் வாகனத்தை பெற முடிகிறது. ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னியோ ஏற்கனவே கூறியதுபோல் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, ஜிம்னியில் 2 வேரியண்ட்கள் மட்டுமே உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பல விஷயங்களில் ஜிம்னியை காட்டிலும் மஹிந்திரா தார் சிறப்பானதாகவும், அனைத்து விதமான கஸ்டமர்களுக்கும் ஏற்றதாகவும் உள்ளது. இதனாலேயே, ஜிம்னியை காட்டிலும் கஸ்டமர்கள் நிறைய பேர் தார் வாகனத்தை தேடி வருகின்றனர். தாரின் ஒரேயொரு குறை என்னவென்றால், 3 கதவுகள் மட்டுமே கொடுக்கப்படுவது ஆகும். ஆதலால், 5-கதவு தார் அறிமுகம் செய்யப்பட்டால் இந்த ஒரு குறையும் நீங்கிவிடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 8:00 [IST]
English summary
Why many buyers go for mahindra thar instead of maruti suzuki jimny
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X