இளம் தொழிலதிபர்களுக்கு ஏற்ற காரா டொயோட்டா ஹைரைடர்.. எந்த வழியில் இந்த கார் அவர்களுக்கு ஏற்றது?..

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காட்சியளிக்கின்றது. இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் (Strong Hybrid) தொழில்நுட்பம் கொண்ட தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், சில யுக்திகளை பயன்படுத்தினால் இந்த கார் நிறுவனம் சொன்னதைவிட அதிகம் மைலேஜ் தரக் கூடும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், இதன் மைலேஜ் திறனை 29 கிமீ முதல் 30 கிமீ வரை உயர்த்த முடியுமாம்.

இத்தகைய ஓர் கார் மாடலாவே அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் இளம் தொழில்முனைவோருக்கு ஏற்றது என கூறப்படுகின்றது. எந்த வகையில் இந்த டொயோட்டா கார் அவர்களுக்கு ஏற்றது என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Toyota urban cruiser hyryder

இளம் தொழில்முனைவோரின் முக்கிய குறிக்கோளே சேமிப்புதான். அந்தவகையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மிகப் பெரிய சேமிப்பை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்தைக் கொண்ட ஆப்ஷன் எரிபொருள் விஷயத்தில் மிகப் பெரிய சிக்கனத்தைச் செய்து உச்சபட்ச மைலேஜை வழங்கும்.

எனவே பணத்தை பெட்ரோலுக்காக அதிகம் செலவழிப்பது தவிர்க்கப்படுகின்றது. இது முதல் பிளஸ் ஆகும். இதேபோல் இன்னும் மதிப்புகளை அது கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த திறன் வெளிப்பாடு நகர மற்றும் வெளியூர் பயணங்களுக்கு ஏற்றதாகவும், தொழில்முனைவோரின் டேஸ்ட்டிற்கு ஏற்றதாகவும் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, சிறந்த அந்தஸ்த்தையும் இந்த கார் அவர்களுக்கு வழங்கும். கூடுதலாக இது ஓர் நம்பகமான தயாரிப்பும்கூட. மேலும், பிரீமியம் மற்றும் சொகுசாக பயண அனுபவத்தையும் இந்த கார் மாடல் அவர்களுக்கு வழங்குகின்றது. இதுபோன்ற காரணங்களினாலேயே இந்த கார் இளம் தொழில்முனைவோருக்கு ஏற்ற கார் மாடலாக கருதப்படுகின்றது.

ஹைரைடர் செயல்திறன்: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வலுவான ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைப்ரிட் சிஸ்டம் ஏற்கனவே கூறியதைப் போலவே மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்கிறது.

குறிப்பாக, சிக்னலில் கார் நிற்கும்போது முழுமையாக எரிபொருள் பயன்பாட்டை நிறுத்திவிட்டு அது மின்சாரத்தில் எஞ்சினை இயங்க செய்யும். இதேபோல், பலவழிகளில் இந்த கார் எரிபொருள் சிக்கனத்தை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், குறைவான செலவில் அதிகப்படியான பயணத்தை மேற்கொள்ள முடியும். அடிக்கடி பயணித்தாலும், அந்த பயணம் உங்களின் பாக்கெட்டை கடிக்காமல் இந்த கார் பார்த்துக் கொள்ளும்.

சிறப்பு வசதிகள்: ஹைரைடர் போதுமான இடவசதி மற்றும் பிரீமியம் உணர்வை வழங்கும். இதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை டொயோட்டா நிறுவனம் இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற மிக சிறந்த லேட்டஸ்ட் டெக்னாலஜியை ஹைரைடர் கொண்டுள்ளது. இந்த வசதிகள் ஓட்டுநர் அனுபவத்தை பலமடங்கு மேம்படுத்தும். நீண்ட தூர பயணங்களையும் இவை சுவாரஸ்யமானதாக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்: டொயோட்டா ஹைரைடரில் காரில் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல பாதுகாப்பு அம்சங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு சான்றாக பலதரப்பட்ட ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் கூடிய ஏபிஎஸ் (ABS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்றவற்றை டொயோட்டா இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்கள் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மிகப் பெரிய உறுதி செய்கின்றன. இந்த அம்சங்கள் தொழில்முனைவோர் அனைவருக்கும் அவசியமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலை: அனைத்திலும் சிக்கனத்தை எதிர்பார்க்கும் தொழில்முனைவோர் விலை விஷயத்திலும் சிக்கனத்தையே எதிர்பார்ப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிகவும் சவாலான விலையில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 11.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த பட்ஜெட் விலை புதிதாக தொழில்முனைவோராக மாறியிருப்பவராலும் எளிதில் நுகரக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரின் பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாகே இருக்கும். ஆகையால், இந்த காரில் செய்யப்படும் முதலீடும் உகந்ததாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் செயல்திறன், வசதி மற்றும் பாதுகாப்பு என அனைத்திலும் சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், இளம் தொழில்முனைவோருடன் சேர்ந்து இந்த காரும் அயராத உழைத்து அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக மிகப் பெரிய சேமிப்பையும் இந்த கார் வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 2, 2024, 6:00 [IST]
English summary
Why the toyota urban cruiser hyryder is the perfect suv for indian entrepreneurs
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+