அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஓர் வீடியோவை அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அது ஓர் மோட்டார்ஹோம் (Motorhome)-இன் வீடியோ ஆகும். இந்த வீடியோவுடன் சேர்த்து ஓர் சூப்பரான தகவலையும் அவர் பகிர்ந்திருக்கின்றார்.
மஹிந்திரா ட்ரக்ஸ் (Mahindra Trucks) மற்றும் மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் (Mahindra Lifespaces) இடையிலான ஒத்துழைப்பின்கீழ் இது உருவாக்கப்படலாம் என்றே அவர் கூறி இருக்கின்றார். இந்த தகவலே இந்தியர்கள் சிலரை தற்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் மோட்டார்ஹோம் கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது.

நாட்டில் ஒரு சிலர் தங்களுக்கான மோட்டார்ஹோம்களை மினி வேன் அல்லது பேருந்துகளின் வாயிலாக தயார் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, மினி வீடாக அந்த வாகனங்களை மாற்றி பயன்படுத்துகின்றனர். இந்த நிலையிலேயே ஓர் சூப்பரான மோட்டார்ஹோமின் வீடியோவைப் பகிர்ந்து இதை விரைவில் மஹிந்திரா உருவாக்கலாம் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவில் எந்தவொரு வாகன உற்பத்தி நிறுவனமும் மோட்டார்ஹோமை அதிகாரப்பூர்வமாக தயார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே மஹிந்திரா நிறுவனம் மோட்டார்ஹோமின் உற்பத்தியைத் தொடங்கும் எனில் இந்தியாவின் முதல் மோட்டார்ஹோம் உற்பத்தி நிறுவனமாக மஹிந்திரா மாறக் கூடும். இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் வழக்கமான போக்குவரத்து பயன்பாட்டு வாகனங்களை மோட்டார்ஹோமாக மாற்றிக் கொடுக்கும் நிறுவனங்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கும் வீடியோவில் இடம் பெற்றிருக்கும் மோட்டார்ஹோமின் மதிப்பு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகம் ஆகும். இந்திய மதிப்பில் அதன் விலை ரூ. 8 கோடிக்கும் அதிகம். அமெரிக்கன் கோச் கிளாஸ் ஏ மோட்டார்ஹோம் (American Coach Class A Motorhome) என்கிற பெயரில் அமெரிக்க சந்தையில் இந்த மோட்டார்ஹோம் அறியப்படுகின்றது.
அதன் அதிக விலைக்கு ஏற்பவே சகல வசதிகளையும் அது தனக்குள் தாங்கி இருக்கும். மினி வீடு என்பதற்கு பதிலாக மினி அரண்மனை என கூறும் அளவிற்கு சகல அதில் வசதிகள் இடம் பெற்றிருக்கும். படுக்கை அறை, சமயலறை, கழிவறை, உறவினர்களுடன் அமர்ந்து பேசுவதற்கான பகுதி, பொழுதுபோக்க டிவி, குளியல் அறை மற்றும் சிறிய கேம்ப் அமைப்பதற்கான வசதி என ஏகப்பட்டவற்றை இந்த வகை வாகனம் தாங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, சமையலறை இன்றைய நவீன கால மாடர்ன் கிட்சன்களுக்கு டஃப் கொடுக்கும் சமையலறையே இந்த மோட்டார்ஹோமில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் படுக்கையில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகளும் படுத்துறங்க முடியும். இத்துடனேயே இரண்டு சேஃபா செட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமாதிரியான அம்சங்களை மோட்டார்ஹோம்கள் கொண்டிருக்கும் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே பயணத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் தங்களின் பயணம் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மோட்டார்ஹோம் வகை வாகனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுமாதிரியான ஓர் வாகனங்களை தயாரிக்க இருப்பதையே சூசகமாக தெரிவித்து இருக்கின்றார் ஆனந்த் மஹிந்திரா.

ஆனால், இந்த நிச்சயம் தொடங்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அவரின் பதிவு எதிர்காலத்தில் மஹிந்திரா இந்த பணிகளைக் கையில் எடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அமெரிக்கன் கோச் கிளாஸ் ஏ மோட்டார்ஹோமில் ஹெவி வகை ஐஎஸ்எக்ஸ்15 டீசல் எஞ்சினை பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த எஞ்சின் 400-600 பிஎச்பி மற்றும் 1966-2779 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் ஒரு சிலர் மோட்டார்ஹோமை பயன்படுத்தி வருகின்றனர். யுட்யூபில் வீடியோ பதிவிடவும், தங்களுடைய பயணத்தை சுவாரஷ்யமாக்கிக் கொள்ளவும் ஒரு சிலர் மோட்டார்ஹோமை பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், இந்த கலாச்சாரம் விரைவில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் இதில் கால்தடம் பதிக்கும் எனில் கட்டாயம் இந்தியாவில் மோட்டார்ஹோம் கலாச்சாரம் மேலும் பலமடங்கு விரிவடைவதற்கான சூழல் உருவாகும்.


Click it and Unblock the Notifications









