சார்ஜ் பண்ணதையே மறந்துவிடுவோம்... பைக் வாங்கும் விலையில் கிடைப்பதால், எல்லாரும் புக் பண்ண போறாங்க!!

உலக இவி தினம் (World EV Day) இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, எலக்ட்ரிக் வாகனங்களில் தாங்கள் அடைந்த முன்னேற்றத்தை சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளன. அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக புதியதாக சில எலக்ட்ரிக் வாகனங்கள் இன்றைய தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) நிறுவனம் அதன் புதிய இப்ளூ செட்டி (eBlu Cety) எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமில்லாமல், எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. 3 சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் ஆகும்.

godawari electric launches eblu cety

இந்த நிறுவனத்தில் புதியதாக இப்ளூ செட்டி என்கிற எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக இவி தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் இ-ரிக்‌ஷா ஆனது மற்ற ஆட்டோ ரிக்‌ஷாக்களில் இருந்து தோற்றத்தில் வித்தியாசமானதாக உள்ளது. ஆட்டோவின் அகலம் குறைக்கப்பட்டு, நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் நீளம் 2795மிமீ, அகலம் 993மிமீ மற்றும் உயரம் 1782மிமீ ஆகும். குறிப்பாக, ஷேர் ஆட்டோக்கள் சந்தையில் புதிய கோதாவரி இப்ளூ செட்டி ஆட்டோவிற்கு நல்ல டிமாண்ட் இருக்கும். ஏனெனில், பயணத்தை ஷேர் செய்துக்கொண்டு நிறைய பேர் பயணம் செய்யும் வகையில் அதிக இருக்கை வசதிகளுடன் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ உருவாக்கபட்டுள்ளது.

godawari electric launches eblu cety

டிரைவருக்கு பின்னால், எதிரெதிர் திசைகளில் பயணிகள் அமர முடியும். டிரைவர் இருக்கை கூட நன்கு அகலமானதாக உள்ளது. புதிய கோதாவரி இப்ளூ செட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2170மிமீ ஆகும்.

தரையில் இருந்து ஆட்டோவின் அடித்தள பகுதி 240மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால், எந்தவொரு சாலைக்கும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை தைரியமாக கொண்டு செல்லலாம். இந்த புதிய ஆட்டோ ரிக்‌ஷாவில் ஆட்டோமேட்டிக்காக இயங்கக்கூடிய வைபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்படுதிறனை பொறுத்தவரையில், இது கொஞ்சம் மெதுவான எலக்ட்ரிக் ரிக்‌ஷா ஆகும்.

godawari electric launches eblu cety

ஏனெனில், இந்த ஆட்டோவில் அதிகப்பட்சமாகவே மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் என கோதாவரி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள 51.2 வோல்ட் மற்றும் 100 ஆம்பியர்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 95கிமீ-க்கு ஆட்டோ ஓட்டலாமாம்.

இந்த ஆட்டோ உடன் கிடைக்கும் 48 வோல்ட், 20 ஆம்பியர் சார்ஜரை வீட்டு உபயோக மின்சாரத்திலும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் தேவைப்படும். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஷாக் அப்சார்பர் மற்றும் காயில் ஸ்பிரிங்ஸ் உடன் இரட்டை ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 6 இலைகள் உடன் இலை சுருளும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸின் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவின் முக்கிய சிறப்பம்சம், இதனுள் அமரும் பயணிகள் அதிக லெக் ரூம் வசதியை பெறலாம் என்பதாகும். இத்தகைய அகலம் குறைவான எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் எளிதாக போக்குவரத்து நெரிசல்களில் புகுந்து, புகுந்து செல்லலாம். அதுமட்டுமின்றி, வாகனத்திற்கு 1 வருட (அ) 20,000கிமீ உத்தரவாதத்தையும், பேட்டரி & சார்ஜருக்கு 3 வருட (அ) 80,000கிமீ உத்தரவாதத்தையும் கோதாவரி அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 19:28 [IST]
English summary
World ev day godawari electric motors launches eblu cety price features all details
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X