15 நிமிஷத்துல முழுசா சார்ஜாகும் பேருந்து.. ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு லாபத்தை அள்ளி தர போகும் பேருந்து இதுதான்
பஸ் இன்டஸ்ட்ரியில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது வீர வாஹனா (Veera Vahana). இதேபோல், ஆற்றல் சார்ந்த தொழில்நுட்ப (Energy Tech) பிரிவில் முன்னணி பிராண்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றது எக்ஸ்போனென்ட் எனெர்ஜி (Exponent Energy). இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்தே, உலகின் அதிக வேகத்தில் சார்ஜாகும் பேருந்தை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பேருந்திற்கு வீர மஹாசம்ரத் இவி (Veera Mahasamrat EV) எனும் பெயரை இவர்கள் சூட்டியிருக்கின்றனர். இந்த பேருந்தை வெறும் 15 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்து விட முடியும் என கூறப்படுகின்றது.
இத்தனைக்கும் இந்த பேருந்தில் 320 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இவ்வளவு பெரிய பேட்டரி பேக்கையே கால் மணி நேரத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒட்டுமொத்த மின்சார வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த அளவிற்கு வேகமாக வேறு எந்த வாகனத்தையும், அதுவும், பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 100 சதவீத சார்ஜை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் எக்ஸ்போனென்ட் எனெர்ஜி மற்றும் வீர வாஹானா இவர்களின் இணைவில் தயார் செய்யப்பட்டு இருக்கும் பேருந்து உலக அதிசயமாகக் காட்சியளிக்கின்றது.
வீர மஹாசம்ரத் இவி எலெக்ட்ரிக் பேருந்தின் அதி வேக சார்ஜ் திறனுக்கு எக்ஸ்போனென்ட்-இன் 1 MW சார்ஜிங் தொழில்நுட்பமே காரணம் ஆகும். இதுவே சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் பேட்டரியை சார்ஜ் செய்ய உதவியாக இருக்கின்றது. இந்த பேருந்தில் பொருத்தப்பட்டு இருக்கும் பேட்டரி பேக்கிற்கு 6 லட்சம் கிமீ / 3,000 லைஃப் சைக்கிள் வாரண்டியை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வீர மஹாசம்ரத் இவி, ஓர் 13.5 மீட்டர் நீளம் முள்ள 2 ஆக்ஸில்கள் கொண்ட பேருந்து ஆகும். இந்த பேருந்தை இன்டர்சிட்டி பயணங்களைக் கருத்தில் கொண்டே தயார் செய்திருக்கின்றனர். குறிப்பாக, ஐசிஇ பேருந்தைக் காட்டிலும் அதிகம் லாபம் தரும் வகையில் இதனை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர்.
குறிப்பாக, பெங்களூரு - ஹைதராபாத் ரூட்டை மையப்படுத்தி இந்த பேருந்தை அவர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இரு முனைகளிலும் 1 MW சார்ஜிங் மையத்தை அவர்கள் நிறுவ இருக்கின்றனர். ஆகையால், சீக்கிரமே இரண்டு ஹை-டெக் சிட்டிகளிலும் இந்த வீர மஹாசம்ரத் இவி எலெக்ட்ரிக் பேருந்து நடமாட்டத்தைக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பேருந்து பயன்பாட்டிற்கு வந்தால் வழக்கமான உள் எரிப்பு இயந்திர (ICE) பேருந்துகளை காட்டிலும் இயக்க செலவு 30 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகின்றது. இதனால்தான் இந்த பேருந்து மிகப் பெரிய லாபத்தை பேருந்து ஆபரேட்டர்களுக்கு வழங்கும் என கூறப்படுகின்றது.
மேலும், 15 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பதால் நீண்டநேரம் இதை சார்ஜ் செய்ய காத்திருக்க வேண்டும் என்கிற சூழலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. எனவே, பயணிகளாலும் விரைவான பயணத்தைப் பெற பேருந்தின் இந்த திறன் ஏதுவாக இருக்கும். இதற்காக இரு முனைகளில் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளில் எக்ஸ்போனென்ட் தன்னுடை அதிக வேகத்தில் சார்ஜிங் செய்யும் மையங்களை நிறுவ இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை முழுமையான பசுமை இயக்கத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் ஐசிஇ எஞ்சின் கொண்டவையாகவே இருக்கின்றன. மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்ய மிக அதிக நேரம் தேவைப்படும் என்பதாலும், பயணிகள் யாரும் அவ்வளவு நேரம் காத்திருக்க மாட்டார்கள் என்பதாலும் பலர் மின்சார பேருந்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வர தயங்குகின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் மிக அதிக அளவில், குறிப்பாக, வெளியூர் பயணங்களில் எலெக்ட்ரிக் பேருந்துகள் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரப்படும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








