சொத்தை விற்க தயார்னா இந்த கார்களை வாங்கலாம்.. ஆனா சொத்தை முழுசா வித்தாலும் இந்த கார்களை வாங்க முடியுமா தெரியல!

கார்கள் ஒரு கோடிக்கும், ரெண்டு கோடி ரூபாக்கும் விற்கப்படுவதே இங்கு நம்மில் பலருக்கு ஆச்சரியமானதாக இருக்கின்றது. ஆனால், இந்த உலகத்தில் இதை விடவும் அதிக விலைக் கொண்ட கார் மாடல்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, 100 கோடி ரூபாக்கும் அதிகமான விலைக் கொண்ட கார் மாடல்களும் இந்த உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த மாதிரியான மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் சிலவற்றை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, உலகின் மிக மிக விலை உயர்ந்த டாப் ஐந்து கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Worlds most expensive cars

எஸ்பி ஆட்டோமோட்டிவ் சாவோஸ் (SP Automotive Chaos): இந்த உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். அதேவேளையில், இந்த பட்டியலில் இருப்பதிலேயே விலை குறைவான கார் மாடலாகவும் இதுவே இருக்கின்றது. சாவோஸ், இது ஒரு ஹைபிரிட் அம்சம் கொண்ட சூப்பர் கார் மாடல் ஆகும். இது வெறும் 1.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வழக்கமான வேரியண்ட் 2000 குதிரை திறன்களையும், ஹைபிரிட் அம்சம் கொண்ட வேரியண்ட் 3000 குதிரை திறன்களையும் வெளியேற்றும். இதன் விலை ரூ. 119.98 கோடிகள் ஆகும். இந்த அளவிற்கு யாருமே நம்ப முடியாத விலையிலேயே எஸ்பி ஆட்டோமோட்டிவ் சாவோஸ் சூப்பர் கார் விற்கப்படுகின்றது.

Sp automotive chaos

பகானி ஜோன்டா எச்பி பர்செட்டா (Pagani Zonda HP Barchetta): இந்த பட்டியலின் நான்காவது அதிகம் விலைக் கொண்ட கார் மாடல் இதுவாகும். வெறும் மூன்றே மூன்று யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் தயாரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 146.64 கோடி ஆகும்.

இதில் ஒரு யூனிட்டை பகானி உரிமையாளரே வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 7.8 லிட்டர் மெர்சிடிஸ் பென்ஸ் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 789 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். மிகவும் முரட்டு தனமான தோற்றத்தை இந்த கார் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Pagani zonda hp barchetta

புகாட்டி லா வோய்டர் நோய்ரே (Bugatti La Voiture Noire): இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 155.80 கோடி ஆகும். ஒரு ஒரு யூனிட் மட்டுமே இது தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் 8.0 லிட்டர் டபிள்யூ 16 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 1500 குதிரை திறனையும், 1600 என்எண் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 420 கிமீ ஆகும். இதனால் வெறும் 2.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும் எட்டிவிட முடியும். இத்தகைய அதீத திறனை வெளியேற்றக் கூடியதே புகாட்டி லா வோய்டர் நோய்ரே ஆகும்.

Bugatti la voiture noire

ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் (Rolls-Royce Boat Tail): 19 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சொகுசு கப்பல் போன்ற காரில் நான்கு பேர் வரை பயணிக்க முடியும். இதேபோல், கூரை இருக்கும் நிலை, கூரை இல்லாத நிலை என கன்வெர்ட் செய்தும் இந்த காரை இயக்க முடியும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 233.28 கோடி ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நோய்ரே டிராப் டெயில் (Rolls-Royce La Rose Noire Droptail): இதுதான் உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 249.48கோடி ரூபாக்கும் அதிக மதிப்பைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட கார் மாடலில் 6.75லிட்டர் வி12எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 601குதிரை திறனையும், 840என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Rolls royce la rose noire droptail

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்டில் உள்ள அனைத்து கார்களையும் இந்தியாவின் பெரும் பணக்காரரரான முகேஷ் அம்பானியே வாங்க யோசிப்பார்போல அந்த அளவிற்கு அதிக விலையைக் கொண்டதாகவே அனைத்து கார் மாடல்களும் இருக்கின்றன. விலைக்கு ஏற்ப அனைத்தும் அரிய மற்றும் தனித்துவமான கார் மாடல்களாக அவைக் காட்சியளிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 15:59 [IST]
English summary
Worlds most expensive cars list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X