ஜியோமி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் இந்த மாசமே தொடங்க போகுது! இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியுமா?

பிரபல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி (Xiaomi)-யின் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வு அரங்கேற இருக்கும் நாள் எது என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்களை மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளில் உள்ள இளைஞர்களின் மனம் கவர்ந்த செல்போன் (Smartphone) உற்பத்தி நிறுவனமாக ஜியோமி (Xiaomi) இருக்கின்றது. இந்த நிறுவனம் செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களைத் தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicle)-யும் உற்பத்தி செய்து வருகின்றது.

Xiaomi su7

Source: Reuters இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் மாடலையே அந்நிறுவனம் விரைவில் டெலிவரி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக எஸ்யூ7 (Speed Ultra 7) விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை விற்பனைச் செய்வதற்கு என்று சீனா முழுவதும் அந்நிறுவனம் 59 ஸ்டோர்களை 29 நகரங்களில் அமைத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இந்த காரை அதிகாரப்பூர்வமாக மார்ச் 28 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக ஜியோமி நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இந்த மாத இறுதியிலேயே அக்காரின் டெலிவரி பணிகளையும் தொடங்க இருப்பதாக அது திட்டமிட்டு இருக்கின்றது. ஆகையால், ஜியோமி கார் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கார் வெளியீட்டு நிகழ்விற்காக காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

Xiaomi su7 interior

இந்த கார் தற்போது சீனாவில் மட்டுமே வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. உலக நாடுகளுக்கு இதற்கு பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறப்படுகின்றது. இந்தியாவிலும் இதன் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. அதேவேளையில், இந்தியாவில் இந்த சீன தயாரிப்பு விற்பனைக்கு வருவது சந்தேகம் என்கின்றனர் வாகனத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் சிலர்.

இதற்கு கடந்த கால கசப்பான நிகழ்வுகளே காரணமாக இருக்கின்றது. அதேநேரத்தில், சீனாவின் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், ஜியோமியின் இந்த எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகைக்கு பச்சைக் கொடி கிடைத்தாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.

Xiaomi su7 rear

ஜியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வருகின்ற 28 ஆம் தேதி அன்றே அவை அனைத்தும் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஜியோமியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் சந்தை பங்குகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.

காலை வர்த்தகத்தின்போது 7 சதவீதம் வரை ஜியோமியின் பங்குகள் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் மின்சார கார் பிரிவில் மிகப் பெரிய நிலவிக் கொண்டிருக்கின்றது. டெஸ்லா மற்றும் பிஒய்டி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டெஸ்லாவிற்கு எதிராக மற்றுமொரு சீன நிறுவனமாக களத்தில் இறங்குகின்றது ஜியோமி.

இந்த நிறுவனம் உலகின் முதல் ஐந்து வாகன உற்பத்தியாளர்களில் ஒருவராக முன்னேற திட்டமிட்டுள்ளது. எஸ்யூ7 டெஸ்லா மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களின் மின்சார கார்களை காட்டிலும் அதிக வேகமான முடுக்க வேகத்தை வழங்கும் திறன் கொண்டது என ஜியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ ஜுன் தெரிவித்து இருக்கின்றார்.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே இந்த ஜியோமி வடிவமைத்திருக்கின்றது. செல்போன் போன்ற பிற மின்னணு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் இந்த கார் பெற்றிருக்கின்றது. ஆகையால், கட்டாயம் ஜியோமி எஸ்யூ7 வாடிக்கையாளர்களை மிகப் பெரிய ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோமி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை பெய்ஜிங்கில் அமைந்திருக்கின்றது.

இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 2 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. வாகன உற்பத்திக்காக அது 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக ஒதுக்கி இருக்கின்றது. ஜியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டெஸ்லா மற்றும் பிஒய்டி நிறுவனங்களின் முன்னணி கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இவர்களுக்கு போட்டி அளிக்கும் பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய இ-காராக எஸ்யூ7 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்க மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் தயாரிப்பு மலிவு விலையைக் கொண்டிருப்பதனாலேயே இந்தியர்கள் மிகப் பெரிய வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், ஜியோமி எலெக்ட்ரிக் கார் மலிவு விலையில் இந்தியாவில் களமிறங்கும்பட்சத்தில் அதற்கும் நல்ல வரவேற்பையே இந்தியர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2024, 11:55 [IST]
English summary
Xiaomi confirms that deliveries of su7 electric car will begin this month
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X