சூப்பர் கார் உற்பத்தியிலும் காலடியை வச்சிருச்சா இந்த சியோமி.. போர்ஷே, ஃபெராரி நிறுவனங்களுக்கு செக்!

பிரபல ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனமான சியோமி (Xiaomi), எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் களமிறங்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் எஸ்யூ7 (SU7) எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே இன்றைய நிலவரப்படி சியோமி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் இந்தியாவில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சியோமி நிறுவனம் முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஓர் தரமான சூப்பர் காரை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம் எஸ்யூ7 அல்ட்ரா (SU7) எனும் காரையே வெளியீடு செய்திருக்கின்றது. இதுவும் எஸ்யூ7 போலவே மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனம் ஆகும். இந்த வாகனத்தை அதீத திறனை வெளியேற்றும் வகையிலேயே சியோமி தயார் செய்திருக்கின்றது. 1,589 எச்பி ஆற்றலை வெளியேற்றும் வகையிலேயே அதனை சியோமி தயார் செய்திருக்கின்றது.

Xiaomi suv7 ultra ecar

இத்தகைய அதீத ஆற்றலுக்காக சியோமி நிறுவனம் ஒட்டுமொத்தமாக மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களை எஸ்யூ7 அல்ட்ரா காரில் வழங்கி இருக்கின்றது. வி8 சீரிஸ் (V8 Series) மற்றும் வி6 சீரிஸ் (V6 Series) வகை மோட்டார்களையே அது பயன்படுத்தி இருக்கின்றது. முன் பக்கத்தில் வி6 எலெக்ட்ரிக் மோட்டாரையும், பின் இரண்டு வி8 சீரிஸ் எலெக்ட்ரிக் மோட்டார்களையே அது வழங்கி இருக்கின்றது.

இதில் வி8 சீரிஸின் ஒற்றை மோட்டார் மட்டுமே அதிகபட்சமாக 578 எச்பி திறனை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், வி6 சீரிஸ் அதிகபட்சமாக 392 எச்பி ஆற்றலை வெளியேற்றும். ஆக இந்த மூன்று மோட்டார்களும் சேர்ந்தே 1,589 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன்மிக்க காராக எஸ்யூ7 அல்ட்ராவை தயார் செய்திருக்கின்றது.

Xiaomi suv7 ultra

இது போர்ஷே டேகேன் டர்போ ஜிடி (Porsche Taycan Turbo GT) கார் மாடலைக் காட்டிலும் 440 எச்பி திறன் அதிகம் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இந்த காரை வெறும் 1.97 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் சியோமி வடிவமைத்திருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க இதோடைய டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ ஆகும். இத்தகைய அதீத வேகத்தைக் கன்ட்ரோல் செய்வதற்காக ஏபி ரேசிங் பிரேக் (AP Racing brake)-குகளையே எஸ்யூ7 அல்ட்ராவில் சியோமி வழங்கி இருக்கின்றது. மேலும், சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் பைரல்லி பி ஜீரோ (Pirelli P Zero) வகை டயர்களையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த காரின் அதிகபட்ச எடையே 1,900 கிலோ மட்டுமே என கூறப்படுகின்றது. இந்த அளவிற்கு எடை குறைவாக இந்த காரை தயார் செய்ய சியோமி நிறுழனம் கார்பன் ஃபைபரால் ஆன பாடி கிட்டையே பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர இன்னும் சில யுக்திகளையும் இந்த காரின் எடையை குறைக்கும் நோக்கில் சியோமி செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில், இந்த கார் அதிக வேகத்தில் இயங்கும்போது 2,145 கிலோ எடைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இத்தகைய எடையை வழங்கும் நோக்கிலேயே நிறுவனம் பெரிய றெக்கையை பின் பக்கத்தில் வழங்கி இருக்கின்றது. தற்போது இந்த காரின் முன் மாதிரி மாடலே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் இதன் உற்பத்தியை நிறுவனம் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 2025 ஆம் ஆண்டு அல்லது 2026 ஆம் ஆண்டிற்குள் எஸ்யூ7 அல்ட்ராவின் உற்பத்தி பற்றிய விபரங்களை சியோமி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 21:44 [IST]
English summary
Xiaomi introduces track focused su7 ultra electric sedan
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+