மொபைல் போன் வாங்குற மாதிரி காரை வாங்குறாங்க!! எம்.ஐ மொபைல் கம்பெனியின் முதல் கார்!

சியோமி எஸ்யூ7 (Xiaomi SU7) எலக்ட்ரிக் காருக்கு சீனாவில் வரவேற்பு எதிர்பார்த்ததை காட்டிலும் குவிந்து வருகிறது. சீனர்கள் இந்த எலக்ட்ரிக் காரை போட்டிப் போட்டு கொண்டு புக் செய்து வருகின்றனர். நம்மை ஷாக் ஆக்கும் வகையில், இதுகுறித்து தற்போது கிடைத்துள்ள தகவல்களை இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பலத்த யோசனைகளுக்கு பிறகு ஒருவழியாக கார்களை உற்பத்தி செய்வதில் இறங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களை உற்பத்தி செய்யாமல், நேரடியாக எலக்ட்ரிக் கார்கள் வணிகத்தில் சியோமி ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

xiaomi su7 bookings crossed 50000

மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சீனாவில் 215,900 யுவான்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.24.92 லட்சம் ஆகும். இந்த சியோமி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் சீனாவில் 29 மாகாணங்களில் துவங்கப்பட்டுள்ளன. டெலிவிரிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்கு துவங்கப்பட உள்ளன.

சீனாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 4 நிமிடங்களில் சுமார் 10 ஆயிரம் சியோமி எஸ்யூ7 கார்கள் மக்களால் புக் செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்த 3 நிமிடங்களில், அதாவது 7 நிமிடங்களில் எஸ்யூ7 கார்கள் புக்கிங் எண்ணிக்கை 20,000ஐ கடந்தது. 50,000 சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் கார்கள் வெறும் 27 நிமிடங்களில் சீனாவில் புக் செய்யப்பட்டுள்ளன.

xiaomi su7 bookings crossed 50000

ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் சியோமியின் முதல் காருக்கு வரவேற்பு கிடைக்கும் என தெரியும், ஆனால் இந்த அளவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. சீனாவில் டெஸ்லா மாடல் 3 என்ற உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக சியோமி எஸ்யூ7 களமிறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பிஒய்டி சீல், பிஒய்டி ஹன், எக்ஸ்பெங்க் பி7ஐ போன்ற மற்ற பிரபலமான எலக்ட்ரிக் கார்களின் விற்பனை போட்டியையும் இந்த சியோமி மாடல் சீனாவில் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் காரை இந்த அளவுக்கு சீன மக்கள் நம்பிக்கையோடு புக் செய்திருப்பதற்கு காரணம், கார்கள் உற்பத்தியில் சியோமி நிறுவனத்துக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும், எஸ்யூ7 காரின் வடிவமைப்புக்கு பல முன்னணி கார் நிறுவனங்களின் தலைவர்கள் உதவி புரிந்துள்ளனர். இதனால்தான், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சியோமி எஸ்யூ7 காரின் அறிமுக நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் முன்னாள் & இந்நாள் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

xiaomi su7 bookings crossed 50000

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை விட நீளம், அகலம் மற்றும் உயரம் என எல்லாவற்றிலும் சியோமி எஸ்யூ7 அதிகமாக உள்ளது. எஸ்யூ7 காரின் 3 வேரியண்ட்களாவன, ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் மேக்ஸ் ஆகும். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான திறன்களில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டரியை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக கார் இயங்கும் தூரமும் வேரியண்ட்களை பொறுத்து வேறுப்படுகிறது.

அதாவது, ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் கிடைக்கும் 73.6 kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 700கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். புரோ வேரியண்ட்டில் இன்னும் கொஞ்சம் திறன்மிக்க 94.3 kWh பேட்டரி பேக் கிடைக்கும். இதன் ரேஞ்ச் 830கிமீ ஆகும். விலையுயர்ந்த மேக்ஸ் வேரியண்ட்டில் 101kWh பேட்டரி பேக்கை சியோமி வழங்கவுள்ளது. இதன் ரேஞ்ச் 800கிமீ ஆகும்.

xiaomi su7 bookings crossed 50000

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்களை வாங்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்று சீனா ஆகும். டெஸ்லா மாடல் 3, பிஒய்டி சீல் போன்ற பிரபலமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருந்தாலும், புதிய புதிய எலக்ட்ரிக் கார்களையும் சீன மக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். இது, துவக்கத்தில் எல்லா கார் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் வரவேற்பு என்பதால், கார்கள் உற்பத்தியில் சியோமி தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 11:39 [IST]
English summary
Xiaomi su7 electric car bookings crossed 50000 in just 27 minutes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X