நிக்ககூட இடம் இல்லாத அளவிற்கு குவியும் கஷ்டமர்கள்.. சியோமி இ-காருக்கு இவ்ளோ டிமாண்டா! 1காரகூட வாங்க முடியாது!

சியோமி (Xiaomi)-யின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-க்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும், 24 மணி நேரத்தில் இந்த ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சியோமி நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கிய நிலையில், அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக எஸ்யூ7 (SU7)-ஐயே அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

Xiaomi su7 sold out for 2024

யாரும் எதிர்பார்த்திராத அம்சங்களையும், சிறப்பு வசதிகளையும் தாங்கியதாக அந்த கார் மாடலை சியோமி உருவாக்கி இருக்கின்றது. செல்போன் மற்றும் மற்ற மின்சாதன பொருட்களில் மட்டுமே இந்த நிறுவனம் சிறப்பானது என நினைத்து வந்தநிலையில், தான் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் மிக சிறந்தவன் என்பதை தன்னுடைய முதல் தயாரிப்பு வாயிலாகவே நிரூபித்துக் காட்டியிருக்கின்றது சியோமி.

இந்த எலெக்ட்ரிக் காரை தற்போது சீன சந்தையில் மட்டுமே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, இந்த ஆண்டிற்காக (2024) ஒதுக்கப்பட்ட அனைத்து எஸ்யூ7 மின்சார கார் யூனிட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் ஆச்சரியமளிக்கும் வெளியாகி உள்ளன.

அதுவும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே பெருமளவிலான யூனிட்டுகளும் விற்று தீர்ந்ததாககூறி ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் உறைய வைத்திருக்கின்றது சியோமி. நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் அதற்கு சுமார் 88,898 ஆர்டர் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

சியோமி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்வதற்கென சீனா 29 முக்கிய நகரங்களில் 59 மையங்களைத் திறந்திருக்கின்றது. இங்கு தற்போது எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்துபார்க்கும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த காரை ஓட்டி பார்ப்பதற்காக சீனாவில் உள்ள சியோமி கார் ஷோரூமில் மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆகையால், நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் விழாக் காலம் பூண்டிருப்பதை நம்மாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகக் காண முடிகின்றது. முந்தைய தகவல்களின்படி எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் மார்ச் மாத இறுதியிலேயே தொடங்கிவிடும் என கூறப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் புதிய தகவல்களோ ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்கிவிடும் என தெரிவிக்கின்றன.

நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆனால், அது முழு வீச்சில் அந்த பணிகளைத் தொடங்கவில்லை. முதல் கட்டமாக ஆண்டிற்கு 1.50 லட்சம் யூனிட்டுகள் வரை தயாரிக்கவே நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இரண்டாவது கட்டத்தில் இது அப்படி 3 லட்சமாக உயர்த்தப்படும்.

எனவே அடுத்த ஆண்டே முழு வீச்சில் சியோமி அதன் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டில் இப்போது மீதம் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால் 1 லட்சம் யூனிட் கார்களை மட்டுமே அது தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அனைத்தும்தான் தற்போது விற்று தீர்ந்துவிட்டதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

அதாவது முதல் 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் யூனிட்டுகளும், அடுத்த 24 மணி நேரத்தில் மீதமிருந்த 10 ஆயிரம் யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. இப்படி ஒரு அமோக வரவேற்பால் இப்போதே அந்த காருக்கு காத்திருப்பு காலம் 7 மாதங்களாக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

சியோமியின் இந்த எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்யூ7 (SU7), எஸ்யூ7 ப்ரோ (SU7 Pro) மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் (SU7 Max) ஆகியவையே அவை ஆகும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டான எஸ்யூ7-க்கு 215,900 யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்திய ரூபாய் மதிப்பில் தோராயாமாக ரூ. 25.36 லட்சம் ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜை தரும். எஸ்யூ7 ப்ரோ ஓர் முழு சார்ஜில் 830 கிமீ ரேஞ்ஜையும், எஸ்யூ7 மேக்ஸ் ஓர் முழு சார்ஜில் 800 கிமீ ரேஞ்ஜையும் பெற முடியும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுடன் ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றது சியோமி. அந்தவகையில், 4.6 லிட்டர் அளவுள்ள சிறிய ஃப்ரிட்ஜ், ஓர் லேப்டாப்பை உள்ளடக்கிக் கொள்ளும் வகையில் பெரிய குளோவ் பாக்ஸ், ஐந்து திரைகள் உள்ளிட்டவை எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 56 அங்குல ஹெட்ஸ் அப் திரை, ஆட்டோ பைலட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் 25 ஸ்பீக்கர்கள் கொண்ட டால்ஃபி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் ஆகியவையே சியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான அம்சங்களே சீனர்கள் தற்போது அந்த காரை ஈ போல் மொய்க்க காரணமாக இருக்கின்றது. இந்நிலையாலேயே இந்த ஆண்டிற்கான அனைத்து எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக சான்றாக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இதுதவிர சில விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே, வரும் நாட்களில் சியோமி அதன் எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 12:02 [IST]
English summary
Xiaomi su7 sold out for 2024 here is more details about e car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+