படத்துல இருப்பது டாப் இல்லாத ஆட்டோ இல்ல.. மாற்று திறனாளிகளுக்கான சூப்பர் வாகனம்.. காருக்கே டஃப் கொடுக்கும்போல!

படத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வாகனம் ஆட்டோ கிடையாது, அதேபோல், அது காரும் கிடையாது. ஆனால், இந்த இரண்டு வாகனங்களையும் பிரதிபலிக்கும் வகையிலேயே அதன் தோற்றம் இருக்கின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான வசதிகள் மற்றும் அம்சங்களைத் தாங்கிய ஓர் மின்சார வாகனமே இது ஆகும். இந்த வாகனத்தை தமிழகத்தைச் சேர்ந்த யாலி மொபிலிட்டி (Yali Mobility) எனும் நிறுவனமே தயார் செய்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஐஐடி மெட்ராஸ் (IIT Madras)-லேயே இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது.

மூன்று சக்கரங்கள் கொண்டிருக்கும் இந்த வாகனத்தில் வீல் சேரில் இருந்து இறங்காமலேயே ஏறிக் கொள்ள முடியும். மாற்று திறனாளிகள் பயணங்களுக்கு மற்றவர்களை நம்பியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வாகனத்தை யாலி மொபிலிட்டி தயார் செய்திருக்கின்றது. பிரத்யேக அம்சங்கள் பலவற்றை தாங்கிய வாகனவமாகவும் அவர்கள் அதனைத் தயார் செய்திருக்கின்றனர்.

Yali mobility vehicle for wheelchair users

அந்தவகையில், கார்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பிரத்யேக ரிமோட்டை இந்த மூன்று சக்கர வாகனத்திற்கு யாலி மொபிலிட்டி வழங்கி இருக்கின்றது. அதில் வாகனத்தின் பின் பக்க கதவை திறப்பதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கும். பின் பக்கம் வாயிலாகவே இந்த வாகனத்தில் ஏறவும், இறங்கவும் முடியும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் சுலபமாக ஏறி-இறங்குவதற்கான ஓர் நுழைவு வாயிலே அது ஆகும். வீல் சேர் சுலபமாக ஏற பின் பக்க ஓர் படியை போல செயல்படும். அது சரிவாக இருக்கின்ற காரணத்தினால் வீல் சேர் சிறிதும் சிரமமின்றி ஏறிவிடும். இத்துடன், பின் பக்கமும் லேசாக சாய்ந்து அதற்கு கூடுதல் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Yali mobility vehicle ev wheelchair users

ஆகையால், வீல் சேரை தூக்கி வாகனத்திற்குள் வைக்க வேண்டும் என்கிற சூழல் இந்த வாகனத்தில் இல்லை. இந்த வாகனத்தில் பிரத்யேக ஹேண்டில்பார், லைட் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இதை ஸ்கூட்டரை போல இயக்கிக் கொள்ள முடியும். மேனுவலாக கியரைப் போடவும் வேண்டியதில்லை.

இத்துடன் பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்கும் நோக்கில் டிஸ்க் பிரேக்கு இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, வீல் சேர் நகர்ந்துவிடாமல் ஒரே இடத்தில் நிற்பதற்கு என தனி ஹேண்ட் பிரேக் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வாகனத்தை நகர விடாமல் ஒரே இடத்தில் நிற்க செய்யும்.

எனவே, பாதுகாப்பான பயணத்தை மாற்றுத் திறனாளிகளால் இந்த வாகனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது. மேலும், இதை இயக்குவதும் மிகவும் சுலபமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. டூ-வீலர் அல்லது ஆட்டோவை ஓட்டுவதைப் போலவே இந்த வாகனத்தை இயக்குவது இருக்கும்.

ஏற்கனவே இந்த வாகனத்தை மாற்றுத் திறனாளிகள் பலர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த வாகனத்தில் எந்த மாதிரியான வீல் சேர்களை ஏற்றிக் கொள்ள முடியும் என யாலி மொபிலிட்டி தெரிவித்திருக்கின்றது. மேனுவல் அல்லது எலெக்ட்ரிக் மற்றும் பெரிய அளவுக் கொண்ட வீல் என அனைத்து விதமான வீல் சேர்களும் உள்ளே நுழைத்துக் கொள்கின்ற வகையில் பெரிய இட வசதி அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த வாகனத்தின் ரேஞ்ச் திறன் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. ஓர் முழு சார்ஜில் 130 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை இந்த வாகனம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகன பிரிவ மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மின்சார வாகனத்தை சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனம் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இருப்பினும், இதை அறியாமல் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த பதிவை டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 23, 2024, 23:09 [IST]
English summary
Yali mobility vehicle designed to improve transportation for wheelchair users
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+